ஆர். எஸ். பாரதி
Jump to navigation
Jump to search
ஆலந்தூர் ஆர். எஸ். பாரதி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 30 சூன் 2016 | |
முன்னவர் | கே. பி. ராமலிங்கம் |
தொகுதி | தமிழ்நாடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 15 ஆகத்து 1947 ஆலந்தூர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
ஆர். எஸ். பாரதி (பிறப்பு: 12 ஆகத்து 1947) தமிழக அரசியல்வாதி ஆவார்.[1] ஆலந்தூர் நகராட்சித் தலைவராக இருந்தவர்.
இளமை மற்றும் குடும்பம்
பாரதி, ராமன் - விஜயலட்சுமி தம்பதியர்களுக்கு மகனாய் பிறந்தார். 1964 ஆம் ஆண்டு வேப்பேரியில் உள்ள செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி இறுதி படிப்பை முடித்து 1974 ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று, 1978 இல் சென்னை சட்டக் கல்லூரியில் (சென்னை பல்கலைக்கழகம்) இளங்கலை சட்டம் (B.L) தேர்ச்சி பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.
ஆர். எஸ். பாரதி - சம்பூர்ணம் இணையரின் திருமணம் 22.01.1980 அன்று நடைபெற்றது. சாய் லஷ்மிகாந்த் மற்றும் சாய் ஜெயகாந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் .[1]
அரசியல்
- 1986 ஆம் ஆண்டு முதன் முறையாக ஆலந்தூர் நகரமன்ற தலைவராக மக்களால் நேரடியாக தேர்ந்த்தேடுக்கப்பட்டார்.
- திராவிட முன்னேற்ற கழகத்தில் அமைப்பு செயலாளர் பொறுப்பில் உள்ளார்.
- ஆலந்தூர் நகரமன்ற தலைவராக நான்குமுறை பொறுப்பு வகித்துள்ளார்.
- ஜூன் மாதம் 2016 நடந்த மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "தென்சென்னை-'டான்சி' புகழ் பாரதி நாடாளுமன்றம் போவாரா?". பார்க்கப்பட்ட நாள் 10 மே 2015.
- ↑ "26 Rajya Sabha members elected unopposed in six states (Roundup) - Times of India".