ஆ. கார்மேகக் கோனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஆ. கார்மேகக் கோனார்
பிறந்ததிகதி (1889-12-27)27 திசம்பர் 1889
பிறந்தஇடம் அகத்தாரிருப்பு, இராமநாதபுரம்
இறப்பு அக்டோபர் 22, 1957(1957-10-22) (அகவை 67)
அறியப்படுவது தமிழறிஞர், பேராசிரியர்

கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவாளர். எழுத்தாளர்.

பிறப்பு

கார்மேகக் கோனார் 1889ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

பணி

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி 1951ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.[1] அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்:

இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.

விருது

இவருக்கு மதுரையில் 1955ஆம் ஆண்டு சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் செந்நாப்புலவர் என்னும் பட்டத்தை பி. டி. இராசன் வழங்கினார்.[2]

ஆக்கங்கள்

இவர் பின்வரும் நூல்களை இயற்றி இருக்கிறார்:

  1. அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் - உரைநூல்)
  2. ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்)
  3. இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்)
  4. ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்
  5. ஒட்டக்கூத்தர்
  6. கண்ணகி தேவி
  7. காப்பியக் கதைகள்
  8. கார்மேகக் கோனார் கட்டுரைகள்
  9. கார்மேகக் கோனார் கவிதைகள்
  10. செந்தமிழ் இலக்கியத்திரட்டு I
  11. பாலபோத இலக்கணம்
  12. மதுரைக் காஞ்சி
  13. மலைபடுகடாம் ஆராய்ச்சி
  14. மூவருலா ஆராய்ச்சி
  15. தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை)
  16. தமிழ்மொழியின் மறுமலர்ச்சி
  17. நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்)

இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி உள்ளது.[3][4]

மறைவு

கார்மேகர் 22-10-1957ஆம் நாள் மதுரையில் மறைந்தார்.[5]

சான்றடைவு

  1. திராவிடநாடு (இதழ்) 3-11-1957, பக்.2
  2. திராவிடநாடு (இதழ்) 3-11-1957, பக்.2
  3. "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - ஆ. கார்மேகக் கோனார்". www.tamilonline.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
  4. "தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கை எண். 46 கொள்கை விளக்கக் குறிப்பு 2008-2009" (PDF). Archived from the original (PDF) on 2022-03-19. பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
  5. திராவிடநாடு (இதழ்) 3-11-1957, பக்.2
"https://tamilar.wiki/index.php?title=ஆ._கார்மேகக்_கோனார்&oldid=25951" இருந்து மீள்விக்கப்பட்டது