ஆ. பரந்தாமன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆ. பரந்தாமன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்சி. வி. எம். அண்ணாமலை
பின்னவர்தொகுதி நீக்கம்
தொகுதிகடம்பத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-07-01)1 சூலை 1939
ஆற்காடு குப்பம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

ஆ. பரந்தாமன் (A. Parandhaman) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆற்காடு குப்பம் கிராமத்தினைச் சேர்ந்தவர். திருத்தனி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இதன் பின்னர் பரந்தாமன், சென்னை தியாகராசர் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கடம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கடம்பத்தூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஆ. பரந்தாமன் 38,569 67.11% 0.43%
காங்கிரசு இரா. குலசேகரன் 18,903 32.89% -0.43%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,666 34.22% 0.87%
பதிவான வாக்குகள் 57,472 72.27% -9.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,210
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.43%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 282.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆ._பரந்தாமன்&oldid=311218" இலிருந்து மீள்விக்கப்பட்டது