இயைபுருவகம்
Jump to navigation
Jump to search
இயைபுருவகம் (இயைபு உருவகம்) என்பது தண்டியலங்காரம் நூலிலில் கூறப்பட்டுள்ள பாடல் அணிகளில் ஒன்று. [1] ஒப்பு நோக்குக: இயைபிலியுருவகம்
பாடல் எடுத்துக்காட்டு
செவ்வாய்த் தளிரும் நகை முகிழும் கண் மலரும்
மை வார் அளக மதுகரமும் - செவ்வி
உடைத்தாம் திருமுகம் என் உள்ளத்து வைத்தார்
துடைத்தாரே அன்றோ துயர் [2]
பாடலின் பொருள்
- அவர் (மால்) தன்
- செவ்வாயாகிய தளிரையும்
- புன்னகை என்னும் அரும்பையும்
- பார்வை மலரையும்
- கூந்தலைச் சுற்றும் வண்டுகளையும்
- என் உள்ளத்தில் நிலைக்கும்படி வைத்திருக்கிறார்
- அதனால் என் துயரத்தைப் போக்கினார்
தளிர், அரும்பு, மலர், வண்டு ஆகிவை ஒன்றோடொன்று இயைபு உடையவை. எனவே இது இயைபு உருவகம்.