இராமநாதன், ஓவியர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
இராமநாதன், ஓவியர் |
---|---|
அறியப்படுவது | கால்நடை மருத்துவர் சிற்பக் கலைஞர் ஓவியர் |
பி. இராமநாதன் என்பவர் ஒரு கால்நடை மருத்துவர், சிற்பக் கலைஞர், ஓவியர் என பன்முகம் கொண்டவராவார்.[1]
பூனாவில் ஒரு தனியார் குதிரைப் பண்ணையில் பல ஆண்டுகள் கால்நடை மருத்துவராக பணிபுரிந்த இவர் பின்னர் சுயேட்சையாக பணிபுரியத் தொடங்கினார். இதன் பிறகு இவர் கலைகளுக்கு போதிய நேரத்தை ஒதுக்க இயன்றது. சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்த இவர் அப்போதிருந்தே வரையத் தொடங்கினார். கல்லூரிக் காலத்தில் ஓவியக் கண்காட்சிகளில் இவருடைய ஓவியங்கள் இடம்பெறத் துவங்கின. இவர் பெரும்பாலும் தெருக்கள், மரங்கள், பறவைகள் போன்றவற்றை வரைவதில் ஆர்வம் கொண்டவர்.[2]
அலியான்ஸ் பிரான்சேசில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சிக்கான அழைப்பிதழை க்ரியா இராமகிருஷ்ணன் இவருக்கு அளித்தார். அந்தக் கண்காட்சி இராமகிருஷ்ணனுக்குள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. பின்னர் இராமகிருஷ்ணன் ஆதிமூலம் வீட்டிற்கு இராமநாதனை அழைத்துச் சென்றார். அதுவே இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு இராமநாதன் நவீன ஓவியங்களை வரையத் தொடங்கினார்.[2]
2008 இல் இவர் வேலை பார்த்த குதிரைப் பண்ணையின் உரிமையாளரான ஷாம் ரூயா இவரின் ஓவியங்களைப் பார்த்து சிற்பங்களை செய்ய ஊக்குவித்தார். அவர் வழியாக சுகாஸ் சுதார் என்னும் சிற்பக் கலைஞரின் அறிமுகத்தைப் பெற்றார். அவர் இராமநாதனுக்கு சிற்பக் கலையின் அடிப்படைகளைக் கற்பித்தார். அவருடன் சேர்ந்து இராமநாதன் இரண்டு உலோக குதிரைச் சிற்பங்களைச் செய்தார். அதில் ஒன்று குதிரையின் தலைமட்டுமே கொண்ட சிற்பமாகும். அது 9 அடி உயரமும் ஒரு டன்னுக்கு மேல் எடை கொண்டதுமாகும். அது குதிரைப் பண்ணையின் முகப்பில் நிறுவப்பட்டது. இந்தச் சிற்பத்தை இந்தியாவின் பல முன்னணி சிற்பக் கலைஞர்கள் கண்டு பாராட்டினர். இவர் இதுவரை நான்கைந்து சிற்பங்களை செய்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
- ↑ Aug 2, Supratim PalSupratim Pal / Updated:; 2019; Ist, 14:22. "This doc gives a leg-up to trotters". Pune Mirror (in English). Archived from the original on 2021-09-06. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ 2.0 2.1 2.2 ஆசை (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். pp. 228–233.