இரா. இரவி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

இரா. இரவி (Ra. Ravi) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கவிஞராவார்.[1][2] 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். புதுக்கவிதை, ஐக்கூ,[3] லிமரிக், துளிப்பா என்று பல கவிதை வடிவங்களில் எழுதி வருகிறார். பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இராமகிருட்டிணன்-சரோஜினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மதுரையில் மேல் நிலைக் கல்வி பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் இளங்கலை வணிகவியல் பயின்று பட்டம் பெற்றார். தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் 1982-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார். பின் பதவி உயர்வு பெற்று, உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவரது ஐக்கூ கவிதைகள் பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் பாடநூல்களில் இடம்பெற்றன.

வெளிவந்த நூல்கள்

  1. கவிதைச் சாரல் - 1997
  2. ஹைக்கூ கவிதைகள் - 1998
  3. விழிகளில் ஹைக்கூ - 2003
  4. உள்ளத்தில் ஹைக்கூ - 2004
  5. என்னவள் - 2005
  6. நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
  7. கவிதை அல்ல விதை - 2007
  8. இதயத்தில் ஹைக்கூ - 2007

சிறப்புகள்

  • 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.[சான்று தேவை]
  • இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.
  • இவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது.[சான்று தேவை]
  • சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
  • இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம் "தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.
  • இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார்.

மேற்கோள்கள்

  1. "இணை(த)யத்தில் வாழும் எம் தமிழ்:கவிஞர் இரா.இரவி". தினமணி. https://www.dinamani.com/specials/kavithaimani/2016/Apr/17/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-1315185.html. பார்த்த நாள்: 31 January 2025. 
  2. "சுமைகளும் சுகங்களும் :கவிஞர் இரா,இரவி". தினமணி. https://www.dinamani.com/specials/kavithaimani/2017/May/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-----%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2702721.html. பார்த்த நாள்: 31 January 2025. 
  3. jeyamohan (2025-01-26). "இரா.இரவி". எழுத்தாளர் ஜெயமோகன். Retrieved 2025-01-31.
"https://tamilar.wiki/w/index.php?title=இரா._இரவி&oldid=279883" இலிருந்து மீள்விக்கப்பட்டது