இரா. நல்லகண்ணு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தகைசால் தமிழர்
இரா. நல்லகண்ணு
R.Nallakannu.jpg
மத்திய கமிட்டி உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 திசம்பர் 1925 (1925-12-26) (அகவை 99)
சிறீவைகுண்டம், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

இரா. நல்லகண்ணு (R. Nallakannu, பிறப்பு: 26 திசம்பர் 1925) சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். தப்போது மத்திய குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கிறார்.[சான்று தேவை]

வாழ்க்கை வரலாறு‍

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.[சான்று தேவை]

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.[1]

சாதி எதிர்ப்புப் போராளி

இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.

சாதிய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர்.

விருதுகள்

தமிழக அரசின் அம்பேத்கர் விருதையும்[2] தகைசால் தமிழர் விருதையும் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

  1. http://www.dinamalar.com/Supplementary/anathavikadan_detail.asp?news_id=225&dt=11-19-09[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "இவர்.... நல்லக்கண்ணு". தமிழ் உலகம். அக்டோபர் 3, 2013. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 25, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://wiki1.tamilar.wiki/index.php?title=இரா._நல்லகண்ணு&oldid=28096" இருந்து மீள்விக்கப்பட்டது