இரா. பிரேமா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இரா. பிரேமா
பிறப்புமார்ச் 15, 1954
பெரியகுளம், தேனி மாவட்டம்
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர்
பணிபேராசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், ஆய்வாளார், பெண்ணிய ஆர்வலர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பெண்ணியம், பெண்ணியம் அகலமும் ஆழமும், பெண்ணியக் கதைகள், பெண் மையக்கதைகள், நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்
விருதுகள்மகாகவி பாரதியார் விருது, நல்லாசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது

இரா. பிரேமா (R. Prema) (பிறப்பு: மார்ச் 15, 1954) தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், பெண்ணிய ஆர்வலரும், ஆய்வாளரும் ஆவார்.[1]

கல்வி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், இதழியல், மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். பிரேமா, இராமாயண கிளைக்கதைகளை ஒப்பிட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[2]

பணி

பிரேமா, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அரசுப் பணி ஒய்விற்குப் பின்னர், கொரட்டூர் பக்தவத்சலம் மகளிர் கல்லூரியில் நான்கு வருடங்கள் முதல்வராகப் பணியாற்றினார். இவர் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.[3] இதில் பல தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் புதுச்சேரி, புதுவை பல்கலைக்கழகத்திலும் முதுகலை, இளங்கலை வகுப்புகளுக்கு பாடநூல்களாகவும் ஆய்வு மாணவர்களுக்கு நோக்கு நூல்களாகவும் உள்ளன. சாகித்ய அகாதமிக்காகப் பெண்மையச் சிறுகதைகள்[4] என்ற தலைப்பில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். இவரின் பெண்ணியக் கதைகள், பெண்மையச் சிறுகதைகள் ஆகிய நூல்களை இளநிலை, முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர்.[5]

எழுதியுள்ள நூல்கள்

  1. இராமாயணக் கிளைக்கதைகள் ஒப்பீடு: கம்பன், வால்மீகி, துளசிதாசர்
  2. தமிழகத்தில் இராமாயணத் தாக்கம்
  3. பெண்ணியம்
  4. பெண்ணியம் அணுகுமுறைகள்
  5. கற்பு – சதி – கலாச்சாரம்
  6. கற்பு கலாச்சாரம் (தனிப்பதிப்பு)
  7. குறுந்தொகை – உரை
  8. பெண் மரபிலும் இலக்கியத்திலும்
  9. வை. மு. கோதைநாயகி அம்மாள்[6]
  10. பெண் குலத்தின் பொன் விளக்கு
  11. காப்பியச் சிந்தனைகள்
  12. பெண்ணியக் கதைகள் (தொகுப்பு)
  13. பெண் மையச் சிறுகதைகள் (தொகுப்பு)
  14. பெண் எழுத்துக்களின் அரசியல்
  15. பெண் விடுதலையும் பெண் உரிமையும்
  16. பெண்ணியக் கோட்பாட்டாளர்கள்
  17. விடுதலை வேண்டினும் (கவிதைத் தொகுப்பு)
  18. பெண்ணியம் அகலமும் ஆழமும்
  19. சுல்தானாவின் கனவு (மொழிபெயர்ப்பு நூல்)
  20. உடைபடும் மௌனங்கள் (சிறுகதைத் தொகுப்பு)
  21. எங்களோட கதை
  22. பெண்ணியம் அறிவோம்
  23. நூற்றாண்டு கண்ட பெண் இலக்கிய ஆளுமைகள்
  24. நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்[7]
  25. இரட்டைக் காப்பிய கிளைக் கதைகளும் துணைக் கதைகளும் (பேராசிரியர் முத்துச்சண்முகன் என்பவருடன் இணைந்து எழுதியது)

விருதுகள்

  • 2012 - தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது[8] வழங்கி, தகுதிச் சான்றிதழும், ஒரு லட்சம் ரூபாய்கான காசோலையும், தங்கப் பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தது.·
  • 2012 - சென்னை அரிமா சங்கம், 2011-2012ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது
  • 2011 - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வைர விழா -நிறுவன வளர்ச்சியில் பங்கேற்ற நூல் ஆசிரியர்
  • 2016 - சேலம் தமிழ்ச் சங்கம், சேலம் க. இராசாராம் இலக்கியப் பரிசு
  • 2016 - நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை - சுந்தர ராமசாமி இலக்கிய விருது-2016
  • 2016 - சென்னை பாரதியார் சங்கமும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் - பாரதிச் செம்மல் விருது
  • 2016 - எட்டயபுரம் - மகாகவி பாரதியாரின் 135ஆவது பிறந்த நாள் விழாவில், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் - பாரதி பணிச் செல்வர் விருது.

மேற்கோள்கள்

  1. "பெண்ணியம் இல்லையென்றால் சமூகம் முன்னேறாது (இரா. பிரேமா நேர்காணல்)". இந்து தமிழ் திசை. 
  2. Ilakkiyaveli Tv (2025-05-03), பேராசிரியர் இரா. பிரேமா அவர்களுடன் ஒரு நேர்காணல் | பேராசிரியர் ஏ.இராஜலட்சுமி | இலக்கியவெளிடிவி, retrieved 2025-06-26
  3. "வரலாற்று ஆவணமான கதைகள் (நூறு பெண்கள் நூறு சிறுகதைகள் நூல் விமிர்சனம்)". இந்து தமிழ் திசை. 
  4. பிரேமா, இரா. பிரேமா (2007). பெண்மையச் சிறுகதைகள்(தொகுப்பு) (2nd ed.). சாகித்ய அகாதெமி.
  5. "பெருமைக்குரிய பெண்கள்". வல்லினச் சிறகுகள்: 16. 
  6. "புத்தகம் புதுசு(வை.மு. கோதைநாயகி அம்மாள் நூல் விமிர்சனம்)". குமுதம். 19.11.2001. 
  7. "நூறு பெண்கள் - நூறு சிறுகதைகள் ஓர் உரையாடல்". உங்கள் நூலகம். மார்ச் 2025. 
  8. "தமிழ் வளர்ச்சி துறை".
"https://tamilar.wiki/w/index.php?title=இரா._பிரேமா&oldid=279985" இலிருந்து மீள்விக்கப்பட்டது