இரும்புத்திரை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரும்புத்திரை
இயக்கம்எஸ். எஸ். வாசன்
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி பிலிம்ஸ்
கதைகொத்தமங்கலம் சுப்பு
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவாஜி கணேசன்
வைஜெயந்திமாலா
எஸ். வி. சுப்பைய்யா
எஸ். வி. ரங்கராவ்
டி. பாலசுப்பிரமணியன்
கே. ஏ. தங்கவேலு
வசுந்தரா தேவி
பி. சரோஜா தேவி
பண்டரிபாய்
வனஜா
ஒளிப்பதிவுபி. எல்லப்பன், என். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புஎம். உமாநாத்
வெளியீடுசனவரி 14, 1960
நீளம்18396 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரும்புத்திரை (Irumbu Thirai) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எஸ். வி. சுப்பையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

நடிகர் வேடம்
வைஜெயந்திமாலா மஞ்சு
பி. சரோஜாதேவி மாலதி
சிவாஜி கணேசன் மாணிக்கம்
கே. ஏ. தங்கவேலு கொண்டமுத்து
எஸ். வி. ரங்கராவ் ஆலை அதிபர்
பண்டரிபாய் மாணிக்கம், சரவணன் ஆகியோரின் தாய்
வசுந்தரா தேவி மஞ்சுவின் தாய்

தயாரிப்பு விபரம்

1959 ஆம் ஆண்டில் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு படத்தைத் தயாரிக்கத் தொடங்கினார். இந்தித் திரைப்படத்துக்கு பைகாம் (Paigham) எனப் பெயரிப்பட்டது. தமிழ்ப் படத்திற்குப் பெயரிடப்படவில்லை. படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டார். 2500 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றைப் பரிசீலித்து இரும்புத் திரை என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தார். எல்லா ஊழியர்களையும் அழைத்து ஒரு விருந்து வைத்ததுடன் பெயரை முன்மொழிந்த பையனுக்கு பரிசாக ஒரு தொகையும் அளித்தார் வாசன்.

நிஜ வாழ்வில் தாயும் மகளுமான வசுந்தரா தேவியும் வைஜெயந்திமாலாவும் இந்தப் படத்திலும் தாயும் மகளுமாக நடித்துள்ளார்கள்.

பாடல்கள்

எண். பாடல் பாடியவர்/கள்' ' கால அளவு (நி:செக்)' பாடலாசிரியர்
1 யூடியூபில் என்ன செய்தாலும் ராதா ஜெயலட்சுமி 02:52 பாபநாசம் சிவன்
2 யூடியூபில் நெஞ்சில் குடியிருக்கும் டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா 03:57 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
3 யூடியூபில் ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பி. லீலா 04:27
4 யூடியூபில் மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய் சீர்காழி கோவிந்தராஜன் 02:40
5 யூடியூபில் கையில வாங்கினேன் பையில போடலே திருச்சி லோகநாதன் 03:00
6 யூடியூபில் டப்பா டப்பா டப்பா சீர்காழி கோவிந்தராஜன் 03:12
7 யூடியூபில் நன்றி கெட்ட மனிதருக்கு சீர்காழி கோவிந்தராஜன் 03:22
8 யூடியூபில் படிப்பிற்கொரு கும்பிடு பி. லீலா & ஜிக்கி 02:47 கொத்தமங்கலம் சுப்பு
9 யூடியூபில் ஏரை புடிச்சவனும் இங்கிலிசு படிச்சவனும் திருச்சி லோகநாதன் 03:19
10 யூடியூபில் போட்டுக்கிட்டா திருச்சி லோகநாதன் & எல். ஆர். ஈஸ்வரி 03:32

மேற்கோள்கள்

  1. "1960 – இரும்புத் திரை". lakshmansruthi.com. Archived from the original on 2018-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-10-07.