உகரச்சுட்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உகரச்சுட்டு என்பது அ, இ, உ எனப் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் கூறும் மூவகைச் சுட்டுக்களில்[1] ஒன்று. அகரச்சுட்டு பேசுபவருக்குத் தொலைவிலும், இகரச்சுட்டு பேசுபவருக்கு மிக அண்மையிலும் இருப்பதைச் சுட்டுவதற்குப் பயன்படுகின்றன. உகரச்சுட்டு முன்னிலையில் இருப்பவருடன் பேசும்போது பயன்படுகிறது. தற்காலத்தில் தமிழ்நாட்டில் அகர, இகரச் சுட்டுகள் பயன்பாட்டில் இருந்தாலும் உகரச்சுட்டு வழக்கிழந்துவிட்டது. பிற்காலத்து நன்னூலிலும் உகரச்சுட்டுக் குறிக்கப்பட்டிருப்பதால்[2] அக்காலம் வரையிலாவது தமிழ் நாட்டில் உகரச்சுட்டுப் பயன்பாட்டில் இருந்திருக்கவேண்டும். எனினும், தமிழ் வட்டார வழக்குகள் சிலவற்றில் இன்றும் உகரச்சுட்டு பயன்படுகிறது. குறிப்பாக இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் உகரச்சுட்டுப் பல வடிவங்களில் பயன்பட்டுவருவதைக் காணலாம்.

மேற்கோள்கள்

  1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம். சூத்திரம் 31.
  2. நன்னூல் எழுத்ததிகாரம். சூத்திரம் 66.
"https://tamilar.wiki/index.php?title=உகரச்சுட்டு&oldid=20171" இருந்து மீள்விக்கப்பட்டது