உனிசே அள்ளி
Jump to navigation
Jump to search
உனிசே அள்ளி உனிசேள்ளி உனிசேஹள்ளி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635 303 |
உனிசே அள்ளி (Unisenahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 303.[1] இது வெங்கடதாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
பெயராய்வு
உனிசே என்ற கன்னடச் சொல் புளியைக் குறிக்கும். ஹள்ளி என்ற சொல் ஊரைக் குறிக்கும் புளி விளைச்சல் அதிகமுள்ள பகுதி எனவே உனிசே அள்ளி என்னும் பெயரைப் பெற்றிருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[2]
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,394 வீடுகளும் 5,283 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2,634 ஆண்களும் 2,649 பெண்களும் ஆவா்.[3]
மேற்கோள்
- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Archived from the original on 2021-10-31. Retrieved 2021-10-31.
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 103.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ "Unisenahalli Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-11-19.