எண்ட் சப்ரி
| எண்ட் சப்ரி | |
|---|---|
| தாய்மொழியில் பெயர் | هند صبرى |
| பிறப்பு | 1979 (அகவை 46–47) கெப்லி, துனிசியா |
| குடியுரிமை | |
| பணி | நடிகை • வடிவழகி |
| செயற்பாட்டுக் காலம் | 1994–தற்போது வரை |
| அறியப்படுவது | எகிப்தியத் திரைப்படத்துறை |
| வாழ்க்கைத் துணை | அக்மது எல் செரிப் |
எண்ட் சப்ரி (Hend Sabry; பிறப்பு 1979) ஓர் தூனிசிய-எகிப்திய நடிகையும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் எகிப்தியத் திரைப்படங்களில் தீவிரமாக செயல்படுவதாக அறியப்படுகிறார்.[1]
இளமை வாழ்க்கை
எண்ட் சப்ரி 1979 ஆம் ஆண்டில் துனிசியாவின் கெப்லியில் பிறந்தார்.[2]
இளங்கலை சட்டம் பயின்ற பின்னர், 2004 ஆம் ஆண்டில் அறிவுசார் சொத்து மற்றும் பதிப்புரிமைச் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]
தொழில் வாழ்க்கை
1994 ஆம் ஆண்டில் தனது 14 வயதில் தி சைலன்ஸ் ஆஃப் தி பேலஸ் என்ற திரைப்படம் மூலம் துனிசியத் திரைப்படத் துறையில் சப்ரி அறிமுகமானார். ஒரு இளவரசனின் அரண்மனையில் இரண்டு தலைமுறை பெண்களின் வாழ்க்கையின் மூலம் அரபு உலகில் பாலினம், வர்க்கம் மற்றும் பாலியல் பிரச்சினைகளை இந்தப் படம் ஆராய்கிறது. இத்திரைப்படம் கான் திரைப்பட விழாவில் சிறந்தத் திரைப்படத்திற்கான கேமரா டி 'ஓர் உட்பட பல விருதுகளை வென்றது. மேலும், அந்த ஆண்டு கார்தேஜ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை சப்ரி பெற்றார். அரபு திரையுலகில் ஒரு உன்னதமான திரைப்படமாகக் கருதப்படும் இந்த படம், 2021 ஆம் ஆண்டில் அரபு திரைப்பட வரலாற்றில் 100 சிறந்த பெண்கள் திரைப்படங்களின் பட்டியலில் முதலாவது இடத்தையும்,[4] துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் துபாயின் 100 மிக முக்கியமான அரபு படங்களின் பட்டியலில் 5 வது இடத்தையும் பிடித்தது.[5]
2013 ஆம் ஆண்டில், வணிக இதழான அரேபிய பிசினஸ் இவரை "100 மிகவும் சக்திவாய்ந்த அரபு பெண்கள்" பட்டியலில் சேர்த்தது.[6] 2014 ஆம் ஆண்டில் இவர் காணொளி மற்றும் எண்ணிம முறையிலான உள்ளடக்க தயாரிப்புக்கான எகிப்தின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றான தாயாராவின் கூட்டாளியாக ஆனார்.[7][8] 2015 ஆம் ஆண்டில் இவர் கெய்ரோவை தளமாகக் கொண்ட சலாம் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.[9]
2019 ஆம் ஆண்டில் வெனிசு திரைப்பட விழாவின் ஸ்டார்லைட் சினிமா விருதைப் பெற்ற முதல் அரபு பெண் என்ற பெருமையை சப்ரி பெற்றார்.
எப்போதும் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திய சப்ரி, 2023 ஆம் ஆண்டில் அமெரிக்க திறமை மற்றும் விளையாட்டு நிறுவனமாமான சிஏஏவுடன் கையெழுத்திட்டார். மேலும் நடிப்பிற்கான வேடங்களை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாமல், தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களைக் கண்டறிய ஆர்வமாக இருப்பதாக விளக்கினார்.[10] அரபு திரைப்படத் துறையில் பெண்கள் மீதான பாகுபாடு குறித்து சப்ரி அடிக்கடி விமர்சித்துள்ளார்..[11]
தொண்டு பணிகள்
2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டத்தின் பசிக்கு எதிரான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 2023 இல் காசாக்கரை பகுதியில் இஸ்ரேலிய முற்றுகையின் போது அவர்கள் செயல்படத் தவறியதைக் காரணம் காட்டி சப்ரி தனது பதவியை விட்டு விலகினார்.[12]
சொந்த வாழ்க்கை
சப்ரி ஒரு முறை சிரிய நடிகர் பாஸெல் கயாத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[13][14] ஆனால் 2008 இல் எகிப்திய தொழிலதிபர் அக்மத் எல் செரிப் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[3]
சப்ரி தனது சொந்த நாடான துனிசியா மற்றும் அவர் வசிக்கும் நாடான எகிப்து ஆகிய இரு நாடுகளிலும் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.[15]
கௌரவம்
டிசம்பர் 2024 இல், பிபிசியின் “உத்வேகமளிக்கும் 100 பெண்கள்” பட்டியலில் எண்ட் சப்ரி சேர்க்கப்பட்டார்.[16]
மேற்கோள்கள்
- ↑ "Hend Sabry growing role in Egyptian films highlighted". Al Bawaba. 4 September 2005 இம் மூலத்தில் இருந்து 29 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130629055905/http://www.albawaba.com/news/hend-sabri-growing-role-egyptian-films-highlighted.
- ↑ "Hend Sabry: A Woman of Character". EgyptToday. 2018-03-09. Retrieved 2024-11-24.
- ↑ 3.0 3.1 "Hend Sabry: A Woman of Character". EgyptToday. 2018-03-09. Retrieved 2024-11-24."Hend Sabry: A Woman of Character". EgyptToday. 9 March 2018. Retrieved 24 November 2024.
- ↑ https://middle-east-online.com/en/tunisian-film-silences-palace-ranked-first-list-100-best-films-w
- ↑ Solutions, M. A. D. "Dubai International Film Festival Places The Silence of the Palaces at the Fifth Position on the List of the Top 100 Most Important Arab Films". MAD Solutions Official website - Cairo - Abu Dhabi - Lisbon - New York City (in ஆங்கிலம்). Retrieved 2024-11-24.
- ↑ No. 89. Hend Sabri, arabianbusiness.com; accessed 16 October 2016.
- ↑ "Tayarah: Egypt's Online TV Pioneers". SecneNow. 2016-01-10. Retrieved 2024-11-24.
- ↑ "Women in Arab Cinema: An Interview with Hend Sabry". www.wipo.int (in ஆங்கிலம்). Retrieved 2024-11-24.
- ↑ "Netflix Confirms Hend Sabry Series". About Netflix (in ஆங்கிலம்). Retrieved 2024-11-24.
- ↑ Goodfellow, Melanie (2023-09-27). "International Disruptors: Tunisian-Egyptian Star Hend Sabry Talks Season 2 Of Netflix Hit 'Finding Ola', CAA Signing & Producer Plans". Deadline (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-24.
- ↑ "Women in Arab Cinema: An Interview with Hend Sabry". www.wipo.int (in ஆங்கிலம்). Retrieved 2024-11-24."Women in Arab Cinema: An Interview with Hend Sabry". www.wipo.int. Retrieved 24 November 2024.
- ↑ "Renowned Arab actress Hend Sabry resigns as Goodwill Ambassador for WFP over its failure to mobilize against starvation in Gaza". ahram.org. 22 November 2023.
- ↑ "Watch Hind Sabri's Reaction After Meeting Her Ex-fiancé Basil Khayat! (Video)". Gulf News (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-10-28.
- ↑ "Hend Sabry's Runs Into Her Ex-Fiancé Basil Khayat at The El Gouna Festival". Al Bawaba (in ஆங்கிலம்). Retrieved 2021-10-28.
- ↑ THE EGYPTIAN CATHOLIC CENTER FOR CINEMA HONORS STAR HEND SABRY AND THE CAST OF HALAWAT AL DOUNIA
- ↑ "BBC 100 Women 2024: Who is on the list this year?". BBC. 3 December 2024. https://www.bbc.com/news/resources/idt-4f79d09b-655a-42f8-82b4-9b2ecebab611. பார்த்த நாள்: 3 December 2024.