எமியீட்ரைட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எமியீட்ரைட்டு
Hemihedrite
சிவப்பு போனிக்கோகுரோயிட்டு மற்றும் ஆரஞ்சு எமியீட்ரைட்டு நுண்படிகங்கள்
பொதுவானாவை
வகை
வேதி வாய்பாடுPb10Zn(CrO4)6(SiO4)2(F,OH)2
இனங்காணல்
நிறம்பிரகாசமான ஆரஞ்சு, மருதாணி-பழுப்பு, கிட்டத்தட்ட கருப்பு
படிக இயல்புஅரைக்கோள நன்முக படிகங்கள்
படிக அமைப்புமுச்சாய்வு
இரட்டைப் படிகமுறல்உள்ளது
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்குங்குமப்பூ-மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும் முதல் ஒளிபுகும் வரை
ஒப்படர்த்தி6.42
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 2.105 nβ = 2.320 nγ = 2.650
இரட்டை ஒளிவிலகல்δ = 0.545
பலதிசை வண்ணப்படிகமைபலவீனமானது, மஞ்சள் நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறமாக மாறும்.
2V கோணம்88° (அளவிடப்பட்டது)
மேற்கோள்கள்[1][2][3][4][5]

எமியீட்ரைட்டு (Hemihedrite) என்பது Pb10Zn(CrO4)6(SiO4)2(F,OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய ஈய துத்தநாக குரோமேட்டு சிலிக்கேட் கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. மேலும், தாமிரத்தின் ஒப்புமையான இராணைட்டுடன் ஒரு தொடரை உருவாக்குகிறது.[2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் எமியீட்ரைட்டு கனிமத்தை Hhe[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் அரிசோனாவின் பினல் மாகாணத்திலுள்ள தோர்டில்லா மலைகளில் உள்ள புளோரன்சு ஈய வெள்ளி சுரங்கத்தில் 1967 ஆம் ஆண்டு எமியீட்ரைட்டு முதன்முதலில் காணப்பட்டது.[2] இதன் படிகங்களின் அரைமுக உருவமைப்பிற்காக எமியீட்ரைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]

அரிசோனாவில் உள்ள பல சுரங்க மாவட்டங்களிலிருந்தும், நெவாடாவில் உள்ள ஒரு சுரங்க மாவட்டத்திலிருந்தும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது. சிலியின் அண்டோபகாசுட்டா பகுதி மற்றும் ஈரானின் எசுபகான் மாகாணத்தின் அனராக்கு மாவட்டத்திலிருந்தும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 2.2 2.3 Hemihedrite on Mindat.org
  3. Hemihedrite data on Webmineral
  4. Mineralienatlas
  5. McLean, W.J.; Anthony, J.W. (1970). "The crystal structure of hemihedrite". American Mineralogist 55: 1103–1114. 
  6. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://tamilar.wiki/w/index.php?title=எமியீட்ரைட்டு&oldid=297783" இலிருந்து மீள்விக்கப்பட்டது