எம். கே. பாலன்
எம். கே. பாலன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | இரா. சே. சிறீதர் |
| பின்னவர் | கே. சைதை கிட்டு |
| தொகுதி | சைதாப்பேட்டை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 மே 1951 சென்னை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | அரசியல்வாதி |
எம். கே. பாலன் (M. K. Balan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டைப் பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை முடித்துள்ள பாலன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த எம்.கே.பாலன் அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். 2000ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நடைபயிற்சிக்கு சென்ற எம்.கே. பாலன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்படிக் கடத்தப்பட்ட எம்.கே. பாலன் என்ன ஆனார் என்பதே தெரியாமல் இருந்தது.[2] பல ஆண்டுகளுக்குப் பின்னர் பணத்துக்காக எம்கே பாலன் கடத்தப்பட்டு எரித்து கொல்லப்பட்டதாக 16 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தேர்தல் செயல்பாடு
1991
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எம். கே. பாலன் | 63,235 | 57.37% | +36.87 | |
| தி.மு.க. | இரா. சே. சிறீதர் | 40,473 | 36.72% | -10.33 | |
| பாமக | பி. ஜெயசந்திரன் | 3,038 | 2.76% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. நந்தகுமார் | 2,053 | 1.86% | புதியவர் | |
| ஜனதா கட்சி | கே. கிருஷ்ணமூர்த்தி | 715 | 0.65% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,762 | 20.65% | -5.89% | ||
| பதிவான வாக்குகள் | 110,216 | 53.47% | -12.64% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 209,145 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 10.33% | |||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 365-367.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "எம்.கே.பாலன் என்ன ஆனார்". https://www.dinamani.com/latest-news/2009/Jun/25/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-30519.html. பார்த்த நாள்: 22 July 2025.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.