எரியோடு
| எரியோடு | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | 10°31′59″N 78°04′01″E / 10.533°N 78.067°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
| வட்டம் | வேடசந்தூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,890 (2011[update]) • 586/km2 (1,518/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
15.17 சதுர கிலோமீட்டர்கள் (5.86 sq mi) • 260 மீட்டர்கள் (850 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/eriodu | ||||||
எரியோடு (ஆங்கிலம்:Eriyodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சி, 15.17 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திண்டுக்கல் - கரூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள எரியோடு பேருராட்சியானது, திண்டுக்கல் நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், வேடசந்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இப்பேரூராட்சியில் பொறிக்கடலை தயாரிப்பு தொழில் மிகவும் பிசித்தமாக உள்ளது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி வீடுகளும், 8890 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 972 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ எரியோடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Eriodu Town Panchayat Population Census 2011