எஸ். ஆர். எம். பழநியப்பன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். ஆர். எம். பழநியப்பன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எஸ். ஆர். எம். பழநியப்பன்
அறியப்படுவது எழுத்தாளர்

எஸ். ஆர். எம். பழநியப்பன் மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். துறவி எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் முன்னாள் மலேசியத் தொலைக்காட்சி / வானொலி அலுவலராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், இலக்கிய நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தமிழ் நேசன் (சிறுகதை) பவுன் பரிசுத் திட்டத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார். தற்போது ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு ஆன்மீகக் கட்டுரைகளும் நூல்களுமே எழுதி வருகிறார்; ஆன்மீக வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

ஒலிநாடா

இவர் தம்முடைய சிறுகதைகளை வாசிக்கச் செய்து ஓர் ஒலிநாடாவாக வெளியிட்டுள்ளார். (மலேசியாவில் இது முதல் முயற்சி).

இலவசமாக

தமது நூல்கள் பலவற்றையும் விரும்புவோருக்கு இலவசமாகவே விநியோகித்து வருகிறார்.

நூல்கள்

  • "நீ நாளும் நினை நெஞ்சே" (1993);
  • "நகரத்தாரின் குலதெய்வங்கள்" (1995);
  • "பருவ நாள் விழாக்களும் பலன் தரும் விரதங்களும்" (1996);
  • "ஞானப்பேர் நவில வைத்தார்" (1998);
  • "நேற்றைய நினைவுகள்" (சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் தொகுப்பு - 2000);
  • "பூவின் நாயகி" (மறைந்த தம் மனைவி பற்றிய நினைவுகள் - 2002).

உசாத்துணை