ஐமோல் மக்கள்
"ஐமோல் (மணிப்பூரி எழுத்து வடிவில்-மெய்தி) | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| இந்தியா (மணிப்பூர்) | |
| மொழி(கள்) | |
| ஐமோல் மொழி (மொ1) மெய்தி மொழி (மொ2)[1] | |
| சமயங்கள் | |
| கிறிஸ்தவம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| மெய்தெய் மக்கள், சின்-குகி-மிசோ மக்கள் |
ஐமோல் மக்கள் (Aimol people) என்பவர்கள், இந்தியாவின் முதன்மையாக மணிப்பூரிலும், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அசாம், மேகாலயாவின் சில பகுதிகளிலும் வாழும் ஓர் இனக்குழு ஆகும். இவர்கள் சீன-திபெத்திய மொழியான ஐமோல் மொழியைப் பேசுகிறார்கள். இவர்கள் தங்களை 'ஐமோல்' என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். எந்தத் தொடர்பும் எவரிடமும் இல்லாத ஒரு சுயாதீன பழங்குடியினர். சுதந்திரத்திற்கு முன்பும் இன்றும் ஐமோல் மக்கள் அண்டை சமூகங்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். ஐமோல் மக்கள் கோம், கொய்ரெங், சிரு, சோத்தே, கெல்மா, பீயட், பயட் போன்ற சமூகங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இவர்கள் மணிப்புரியம் (மெய்தி) மொழியை தங்கள் இரண்டாவது மொழியாக எத்னொலோக்கின் படி பயன்படுத்துகின்றனர்.[2]
கிபி 1787-இல், இவர்கள் தங்கள் மொழியில் "உருவாங் லெ வைசோ" என்று அழைக்கப்படும் திமைமுக் மலைகளைச் சுற்றியுள்ள ஓர் இடத்திலிருந்து குடிபெயர்ந்தனர். இவர்களின் முன்னோர்கள் மிசோரமிலிருந்து இடம்பெயர்ந்து, ஜூம் சாகுபடி மூலம் ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. இறுதியாக, 1900 வாக்கில், இவர்களில் சிலர் மணிப்பூரில் உள்ள தெங்னௌபல் மாவட்டத்தில் உள்ள ஐமோல் மலைகளை அடைந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 3400 பேர் ஆகும். இவர்களில் பெரும்பான்மையர் கிறித்துவ மதத்தினைப் பின்பற்றுகின்றனர்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Meitei | Ethnologue". Ethnologue (in ஆங்கிலம்). Retrieved 2023-05-03.
- ↑ "Meitei | Ethnologue". Ethnologue (in ஆங்கிலம்). Retrieved 2023-05-03.
- ↑ Project, Joshua (2025-02-14). "Aimol in India". joshuaproject.net (in ஆங்கிலம்). Retrieved 2025-02-14.