ஓகா
ஓகா ஓகா துறைமுகம் | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 22°28′0″N 69°4′0″E / 22.46667°N 69.06667°E | |
| நாடு | |
| மாநிலம் | குஜராத் |
| மாவட்டம் | தேவபூமி துவாரகை |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 5 km2 (2 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 62,052 |
| • அடர்த்தி | 12,000/km2 (32,000/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 361350 |
| வாகனப் பதிவு | GJ-37 |

ஓகா (Okha), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில், தேவபூமி துவாரகை மாவட்டத்தில், கட்ச் வளைகுடாவில் அமைந்த நகராட்சியுடன் கூடிய துறைமுக நகரம் ஆகும். ஓகா நகரத்திற்கு தெற்கில் துவாரகை 30 கி.மீ. தொலைவிலும் மற்றும் பேட் துவாரகை தீவு 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கடுப்பின் படி ஓகா நகரத்தின் மக்கள்தொகை 62,052 ஆகும்.[1]
வரலாறு

பிரித்தானிய இந்தியா ஆட்சியில் கெயிக்வாட் வம்ச பரோடா சமஸ்தானத்தின் கீழ், (1721 – 1947) துவாரகை, சோமநாதபுரம் மற்றும் ஓகாவும், இந்திய விடுதலை வரை இருந்தது.
பொருளாதாரம்
பாகிஸ்தான் நாட்டிற்கு அருகே அமைந்த ஓகா துறைமுக நகரத்தில் இந்தியக் கடற்படை , இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய சுங்கத் துறை மற்றும் குஜராத் மாநில காவல் துறையின் கடலோரக் காவற்படையின் மையங்கள் செயல்படுகிறது.[2] ஓகா அனல் மின் நிலையத்திற்கு தேவையான பழுப்பு நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து ஓகா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஓகாவின் முக்கியத் தொழில்கள் மீன் பிடித்தல் மற்றும் சுரங்க உப்பு உற்பத்தியாகும்.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஓகா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 62,052 ஆகும். அதில் ஆண்கள் 31,999 ஆகவும்; பெண்கள் 30,053 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8450 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 939 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 67.59% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 68.29%, இசுலாமியர் 31.33%, பிற சமயத்தவர்கள் 0.38% ஆகவுள்ளனர்.[3]
போக்குவரத்து
3 நடைமேடைகள் கொண்ட ஓகா தொடருந்து நிலையத்திலிருந்து இராமேஸ்வரம், தூத்துக்குடி, சென்னை, எர்ணாகுளம், வாரணாசி, புரி, சோமநாதபுரம், துவாரகை, ஜெய்ப்பூர், ஹவுரா, குவகாத்தி மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[4]
ஓகாவிலிருந்து செல்லும் 551 கி.மீ. நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 51, துவாரகை வழியாக பவநகரை இணைக்கிறது.[5]
அருகில் உள்ள விமான நிலையம் 100 கி.மீ. தொலைவில் உள்ள ஜாம் நகரில் உள்ளது.
இதனையும் காண்க
- தேவபூமி துவாரகை மாவட்டம்
- துவாரகை
- துவாரகாதீசர் கோயில்
- தேவபூமி துவாரகை மாவட்டம்
- சோமநாதபுரம் சோமநாதர் கோயில்
மேற்கோள்கள்
- ↑ Okha Population Census 2011
- ↑ Okha, India, Encyclopædia Britannica. Retrieved September 2009.
- ↑ Okha Population Census 2011
- ↑ https://indiarailinfo.com/arrivals/okha-okha/1757
- ↑ National Highway 51 (India)
வெளி இணைப்புகள்
- Jamnagar, Okha ports பரணிடப்பட்டது 2012-07-12 at the வந்தவழி இயந்திரம்