கமர் தாகர்
கமர் தாகர் (Qamar Dagar) ஒரு இந்திய வனப்பெழுத்து நிபுணராவார். இவர் கலம்காரி பானியின் வனப்பெழுத்து அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார். 2016ஆம் ஆண்டில், பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
| கமர் தாகர் | |
|---|---|
| பிறப்பு | புது தில்லி |
| தேசியம் | |
| பணி | வனப்பெழுத்து நிபுணர் |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தாகர் புது தில்லியில் ஒரு பாரம்பரியதுருபாத் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார்.[1][2] தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்றார். இவர் வனப்பெழுத்து நுபுணர்களான ஹசன் மசூடி மற்றும் முகமது எல்பாஸ் ஆகியோரை தனது வழிகாட்டியாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்
இவர், ஒரு தொழில்முறை வனப்பெழுத்து நிபுணராவார். அவர் தனது பணியில் ஒரு சுருக்க சித்திர கையெழுத்துப் பாணியைப் பயன்படுத்துகிறார்.[3] சிஎன்பிசி டிவி 18 என்ற தொலைக்காட்சி நிறுவனம் இவரை இந்தியாவின் "மிகவும் புகழ்பெற்ற சித்திர வனப்பெழுத்து நிபுணர்" என்று அழைத்தது.[4]
இவரது தனி கண்காட்சிகள் இந்தியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்துள்ளன.[5][6] 2019ஆம் ஆண்டில், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் நடந்த குழு கண்காட்சியிலும் பங்கேற்றார்.[7][8]
வனப்பெழுத்துப் பதிப்பை தனது சொந்த தொழில்முறை பயன்பாட்டிற்கு கூடுதலாக, இவர் தனது அமைப்பான கலம்காரி பானியின் வனப்பெழுத்து அறக்கட்டளை மூலம் இந்தியாவில் கலை வடிவத்தை பாதுகாக்க பணியாற்றுகிறார். கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும், வனப்பெழுத்து கலையை உயிரோடு வைத்திருப்பதற்கும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்க இவர் அறக்கட்டளையை நிறுவினார். இவர், சர்வதேச வனப்பெழுத்து விழாக்களை ஏற்பாடு செய்துள்ளார்.[7] இந்தியாவுக்கான சுற்றுலாப் பயணிகளின் கலாச்சார ஈர்ப்பாக இவரது வனப்பெழுத்துதுப் பட்டறைகள் ஊடக கவனத்தை ஈர்த்துள்ளன.[9][10]
விருது
2016 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதான நரி சக்தி புராஸ்கரை இவருக்கு வழங்கினார்.[11][12]
மேற்கோள்கள்
- ↑ Parvez, Subuhi (2012-03-01). "Calligraphy: Reviving the dying art". Hindustan Times (in ஆங்கிலம்). Retrieved 2020-05-16.
- ↑ Banerjee, Sudeshna (2019-03-24). "Different strokes". The Asian Age. Retrieved 2020-05-15.
- ↑ Jones, Vivien; Pokharel, Sugam (2020-04-01). "Qamar Dagar, the woman fighting to keep India's calligraphy culture alive". CNN Travel (in ஆங்கிலம்). Retrieved 2020-04-02.
- ↑ "Art: Learning calligraphy with Qamar Dagar". CNBC TV18 (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-04-02.
- ↑ Raghib, Qazi M. (2018-05-16). "Qamar Dagar: Combining spirituality with calligraphy". National Herald (in ஆங்கிலம்). Retrieved 2020-05-16.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ "Youngsters bring alive art of calligraphy". Business Standard (in ஆங்கிலம்). 2014-05-12. Retrieved 2020-05-16.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ 7.0 7.1 Banerjee, Sudeshna (2019-03-24). "Different strokes". The Asian Age. Retrieved 2020-05-15.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ Varghese, Shiny (2019-02-12). "Telling Strokes: An exhibition honours Mahatma Gandhi through handmade paper and calligraphy". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-05-16.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ "23 exclusive experiences at India's top hotels". Condé Nast Traveller India (in Indian English). 2019-06-26. Retrieved 2020-05-16.
- ↑ Hill, Bee. "A Mindful Guide To Visiting India". Nylon (in ஆங்கிலம்). Retrieved 2020-05-16.
- ↑ "Nari Shakti Awardees- Ms. Qamar Dagar, Delhi | Ministry of Women & Child Development | GoI". Ministry of Women and Child Development. Retrieved 2020-04-02.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ "आधुनिक भारत में लड़का-लड़की में भेदभाव की कोई जगह नहीं: राष्ट्रपति". Amar Ujala. 2017-03-09. Retrieved 2020-05-16.
{{cite web}}: CS1 maint: url-status (link)