கமலா லட்சுமண்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கமலா லட்சுமண்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கமலா லட்சுமணன்
பிறந்ததிகதி 1924 or 1925
பிறந்தஇடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு நவம்பர் 14,2015
பணி எழுத்தாளர்
தேசியம் இந்தியன்
துணைவர் ஆர். கே. லட்சுமண்

கமலா லட்சுமண் (Kamala Laxman) இந்திய சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். இவர் ஓவியர்ஆர்.கே.லட்சுமணின் மனைவி. [1] கமலா 2015 இல் தனது 90ஆம் வயதில் இறந்தார். இவரது மகன் சீனிவாஸ், ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

கமலா சென்னையில் பிறந்து செயின்ட் தாமஸ் கான்வென்ட்டில் படித்தார், பின்னர் தில்லியின் இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றார். மும்பையில் உள்ள சர் ஜே.ஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டிலிருந்து உள்ளக அலங்காரப் பிரிவில் பட்டம் பெற்றார். [2]

இவரது திறமையை உணர்ந்து, இந்தியா புக் ஹவுஸ் கமலாவை 1970 களில் குழந்தைகள் புத்தகங்களை எழுத நியமனம் செய்தது.[3] இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் தி தமா ஸ்டோரீஸ், தெனாலி & அதர் ஸ்டோரிஸ் மற்றும் தமா அண்ட் ஹிச் மிஸிங் மதர் ஆகியவை அடங்கும் .[4] இவரது கதைகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.

தனிப்பட்ட வாழ்க்கை

ஓவியர் ஆர்.கே.லட்சுமனை இவர் திருமணம் செய்து கொண்டார் . கமலா 1965 ஆம் ஆண்டில் மும்பையில் தனது தாயால் நிறுவப்பட்ட மகாலட்சுமி பெண்கள் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக இருந்தார். [5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கமலா_லட்சுமண்&oldid=27518" இருந்து மீள்விக்கப்பட்டது