கருப்பசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கருப்பசாமி முதன்மை கிராமக் காவல் தெய்வமாவார். இவரைக் கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக இவர் உள்ளார். .

கருப்பண்ணசாமி
KarppaswamyArtifactStatue 20240415 202438.jpg
கருப்பண்ணசாமி கற் சிலை/ த்ரீபங்க முத்திரை
வேறு பெயர்கள்கருப்பா, கருப்பன், கருப்பண்ணசாமி, கருப்பு சாமி, அய்யா
தமிழ் எழுத்து முறைகருப்பண்ணசாமி
வகைகாவல் தெய்வம்
இடம்கரிமலை கோபுரம்
மந்திரம்ஓம் கருப்பண்ணசாமி நமஹ
ஆயுதம்அருவாள், சாட்டை, ஈட்டி
வாகனம்குதிரை

கருப்பசாமி வழிபாடு தென்தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக காணப்படுகின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு.

Karuppu Sami ,Karuppasamy

உருவம்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தின் சிற்பப் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கருப்பண்ண சாமி சிலை. கிபி 1900 காலத்திய இச்சிலை, விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக சிலையின் அருங்காட்சியக்குறிப்பில் காணப்படுகிறது.

நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.[1]

படிமம்:Muthu Karrupanna sami.jpg
முத்து கருப்பு சாமி மரச்சிற்பம், வைரசெட்டி பாளையம் மாசி பெரியசாமி கோவில்.

மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். வைணவ சமயத்தின் பெருமாளாகச் சிறுதெய்வ வழிபாட்டில் கொண்டாடப்படுகிறார். சில சிறுதெய்வக் கோயில்களில் கிருஷ்ணரின் உருவ அமைப்போடு உள்ளார். வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் காேவிலில் முத்துக் கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.

சங்கிலிக் கருப்புசாமி மிகவும் உக்கிரம் கொண்டவராகவும், அவரை அடக்கப் பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டுச் சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடித்த சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கருப்புசாமி உள்ளார்.

நம்பிக்கை

கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கருப்புசாமி என்னும் பெயர் கருப்பசாமி எனவும் வழங்கபடுகின்றது.[2]

கோயில்

தமிழ்நாட்டுக் காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாகக் கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமக் கோயில்களே இல்லை எனக் கூறும் அளவிற்கு இந்தக் கடவுள் தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளார்.

விளைநிலங்களில்

விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பனாரை வழிபடுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பனாராகக் கருதி ஆண்டுக்கொருமுறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.

கருப்புசாமிக்கு பிற பெயர்கள்

108 கருப்புசாமிகள் உள்ளதாகவும், 1008 கருப்புசாமிகள் உள்ளதாகவும் நாட்டார் தெய்வங்களை வழிபடும் மக்கள் நம்புகின்றனர். பெரும்பாலான இடங்களில் கருப்புசாமிக்கு உருவம் இல்லாமல் பதிவு வைத்து வழிபடுகின்றனர். அத்தகைய இடங்களில் பெயரே முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. இத்தனை வகையான கருப்பு சாமிகளுள் சிலவற்றுக்கு மட்டுமே உருவங்கள் கொடுக்கப்பட்டு வரையரை செய்யப்பட்டுள்ளன. 108 கருப்புசாமிக்கும் மூத்தவர் கொல்லிமலையில் குடிகொண்டிருக்கும் பெரியசாமி என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

  • வாத்தியார் தோட்டத்து கருப்பசாமி[3]
  • குள்ளக்கருப்பன் சாமி (கள்ளக்குறிச்சி)
  • சங்கிலி கருப்பன்
  • காங்கேயம் சுண்டுவிரல் கருப்பசாமி
  • ஆலடி கருப்பசாமி
  • சிறுவனூர் (பெரியகருப்பு, சின்னக்கருப்பு)
  • மார்நாடு கருப்பசாமி ( சின்னப்பேராலி, விருதுநகர் )
  • முப்புலி கருப்பர்
  • கருப்பனார் சாமி
  • குல கருப்பனார்
  • கருப்பனார்
  • பதினெட்டாம்படியன் (மதுரை அழகர் கோயிலில் உள்ள கருப்பசாமி சன்னதிக்கு பதினெட்டு படிகள் இருப்பதால்)[4]
  • சின்ன கருப்பசாமி
  • மலையாளம் சுவாமி
  • பெரிய கருப்பசாமி
  • மளுவேந்தி கருப்பணசாமி
  • மீனமலை கருப்பசாமி
  • முன்னோடை கருப்பசாமி
  • நொண்டி கருப்பசாமி
  • ஒண்டி கருப்பசாமி
  • கொம்படி கருப்பண்ணசாமி (வாடிப்பட்டி ஸ்ரீ கருப்பசாமி)
  • கோட்டை வாசல் கருப்பசாமி
  • அச்சன்கோவில் கருப்பசாமி.
  • மடை கருப்பசாமிமாவட்டம்ளம்
  • ஆகாச கருப்பு
  • தலத்துக்கருப்பசாமி.மேலநம்பிபுரம். விளாத்திகுளம். தூத்துக்குடி மாவட்டம்
  • பெரிய ஆலங்குளம் சந்தனக்கருப்பசாமி
  • வில்வமரத்து கருப்பராயம் சுவாமி, நம்பியூர், ஈரோடு மாவட்டம்,
  • பொந்துபுளி கருப்பசாமி, மதுரை மாவட்டம்
  • வண்ண கருப்பசாமி,விருப்பாச்சி
  • சோனைகருப்பசாமி மதுரை மாவட்டம்
  • கோட்டைமலை கருப்பசாமி புளியங்குடி தென்காசி மாவட்டம்
  • கிளிக்கூண்டு கருப்பசாமி வானரமுட்டி தூத்துக்குடி மாவட்டம்
  • அருள்மிகு விநாயகபுரம் கருப்பசாமி சித்தர்பீடம் கடலூர்.
  • ஆவியூர் மார்நாட்டு கருப்பசாமி
  • ஆவியூர் நொன்டிகருப்பசாமி முத்துகருப்பசாமி
  • ஆவியூர் ரெட்டகருப்பசாமி
  • மாங்குளம் மார்நாடு கருப்பசாமி
  • மதலைக்கருப்பு (கங்கைகொண்டான், பரமக்குடி)
  • கொல்லிமலை மாசி பெரியகருப்பசாமி (கொல்லிமலை,நாமக்கல்)
  • கொக்கு வெட்டி கருப்பசாமி & சேந்தரப்பன் கோவில் (அம்மாபட்டி, துறையூர்)

இலங்கையில் கருப்பணசாமி வழிபாடு மற்றும் தகவல்கள்

இலங்கையில் உள்ள பலர் இந்துக் கடவுள்களான அம்மன், காளி அம்மன், முருகன், கணேஷ், சிவன், விஷ்ணு கடவுள்களை நம்புகிறார்கள். தமிழர்களும் சிங்களவர்களும் சாதி, தேச பேதமின்றி மத வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களில் குறிப்பாக தமிழ் மக்கள் மாரியம்மன், காளியம்மன், முனியாண்டி சாமி, கருப்பண்ணசுவாமி, சுடலை மாடசுவாமி, மதுரை வீரன், வீரபத்திரன் போன்ற சக்தி வாய்ந்த கிராம தெய்வங்களை நீண்ட காலமாக வழிபட்டு வருகின்றனர். அவர்கள் குல தெய்வங்கள் அல்லது கிராம காவல் தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மாத்தளை முத்துமாரியம்மன் கோயில் இலங்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இந்து ஆலயமாகும். இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய முக்கிய இந்துக் கோவில்களில் இதுவும் ஒன்று.[5]

இலங்கையில், கருப்பு சுவாமி மிகவும் பிரபலமான காவல் தெய்வங்களில் ஒருவர் (இலங்கையின் இந்தியத் தமிழர்களில்), ஏராளமான மக்கள் அவரை குலதேவதாவாகவும் கிராமக் காவல் கடவுளாகவும் வணங்குகிறார்கள். [6]

கருப்பு சுவாமி இலங்கையில் சைவம் மற்றும் அசைவ வழிகளில் வழிபடப்படுகிறார்.

கருப்ப சுவாமி தீய சக்திகளுக்கு எதிரான சக்திவாய்ந்த பாதுகாவலர் என்று இலங்கைத் தமிழர்கள் நம்புகின்றனர். அசுப சக்திகளால் அடிக்கடி துன்பப்படுபவர்களுக்கு கருப்பு ஸ்வாமி வழிபாடு ஆசீர்வாதத்தைத் தரும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு சில தடைகளை போக்கவும் கருப்பு சுவாமி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஐயப்பனின் காவல் தெய்வமாக கருப்பு சுவாமி இருப்பதால் பத்தினெட்டாம்பாடி கருப்பு சுவாமியை அய்யப்ப பக்தர்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். அய்யப்பன் பக்தர்கள் கருப்பு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இது தமிழர்களிடையே மிகவும் பிரபலமானது. இது கருப்பு சுவாமி பூஜை (மண்டல பூஜை) என்று அழைக்கப்படுகிறது. கருப்பு ஸ்வாமி (கரிமலை சங்கிலி கருப்பு சுவாமி) கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் உள்ள கரிமலை கோபுரத்தில் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

கருப்பு சுவாமியின் பல்வேறு வடிவங்களை இலங்கைத் தமிழர்கள் வழிபடுகின்றனர். பத்தினெட்டாம்பாடி கருப்பு ஸ்வாமி, சங்கிலி கருப்பு சுவாமி, பெரிய கருப்பு சுவாமி மற்றும் சின்ன கருப்பு சுவாமி, முத்து கருப்பு சுவாமி போன்றவர்கள் கருப்பு சுவாமியின் மிகவும் பிரபலமான வடிவங்கள்.

குறிப்பாக இலங்கை மக்கள் சாதி மத பேதமின்றி சமய சடங்குகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், சில மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் தங்கள் குல தெய்வத்தை வணங்குகிறார்கள், ஆனால் அவர்கள் சில கலாச்சார விதிமுறைகளுக்கு உட்பட்டு அவ்வாறு செய்கிறார்கள்.

Kula deivam

மேலே உள்ள படத்தில் ஒரு சின்னமான கல் பிரதி காணப்படும். இவை தமிழில் நடுகல் வழிபாடு என்று அழைக்கப்படும் இது தமிழ் மக்களிடையே கடவுளை வழிபடும் ஒரு பொதுவான முறையாகும். இந்த வழிபாடு முறை மிகவும் பாரம்பரியமானது மற்றும் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்றும் கூட, மக்கள் இத்தகைய பாரம்பரிய முறைகள் மூலம் தெய்வவழிபாட்டில் ஈடுபடுகின்றன.[7]

மேற்கோள்கள்

  1. ":: TVU ::".
  2. கறுப்பு = சினம் - 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' - தொல்காப்பியம் உரியியல். கருப்பு = கருமைநிறம்
  3. https://vathiyarthottathukarupparayarr.business.site/?m=true
  4. https://www.vikatan.com/spiritual/temples/madurai-the-history-and-the-glorious-significance-of-pathinettampadi-karuppu-temple
  5. "மகத்தான வாழ்வு தரும் மாத்தளை முத்து மாரியம்மன் திருக்கோவில் || mathalai muthu mariamman temple sri lanka". Maalaimalar (in English). 2018-09-26. Archived from the original on 17 February 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.
  6. "Proceedings of First International Conference & Gathering of Elders". iccsus.org. hon. V. Radhakrishnan.
  7. "Proceedings of First International Conference & Gathering of Elders". iccsus.org. hon. V. Radhakrishnan.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=கருப்பசாமி&oldid=142465" இருந்து மீள்விக்கப்பட்டது