கருவூரார்
Jump to navigation
Jump to search
கருவூரார் கொங்கு நாட்டின் கருவூரில் வாழ்ந்த தமிழ் சைவ கலாச்சாரத்தின் 18 சித்தர்களில் ஒருவர். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர். இவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[1][2][3]
கருவூரார், இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ந்தார். யோக சித்திகள் கைவரப் பெற்றார். போக முனிவரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றார். சித்திகள் பல பெற்றிருந்தாலும் உலக வாழ்வில் பற்று இல்லாமல் இருந்தார்.[4]
கோயில்கள்
- கருவூரில் ஒரு பசுபதீஸ்வரர் கோவிலில் ஒரு தனி சன்னதி உள்ளது.
- தஞ்சை பெரியகோயிலின் பிரகாரத்தில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது.
- திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லையப்பர் திருக்கோயிலில் கருவூரார் சித்தர் அருள்பாலிக்கிறார்.
மேற்கோள்
- ↑ மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
- ↑ "கருவூரார்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
- ↑ பகோரா, குருஸ்ரீ. "கருவூரார் சித்தர் - Naavaapalanigo Trust". naavaapalanigotrust.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
- ↑ காமராஜ், மு ஹரி. "சிவனையே நடுங்க வைத்த சித்தன் கருவூர்த்தேவர்!". பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.