காரக் குர்து
காரக் குர்து Kharak Khurd காரக்கு | |
|---|---|
கிராமம் | |
| அடைபெயர்(கள்): காராக்கியா | |
| ஆள்கூறுகள்: 28°48′25″N 76°21′18″E / 28.807°N 76.355°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | அரியானா |
| மாவட்டம் | பிவானி |
| வட்டம் (தாலுகா) | பிவானி |
| அரசு | |
| • நிர்வாகம் | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 25 km2 (10 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 5,113 |
| • அடர்த்தி | 200/km2 (530/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 127114 |
| வாகனப் பதிவு | எச்.ஆர்- |
காரக் குர்து (Kharak Khurd) இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள பிவானி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். மாவட்டத் தலைமையக நகரமான பிவானியிலிருந்து வடகிழக்கில் தோராயமாக 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் 990 வீடுகளில் 5,113 பேர் வாழ்ந்தனர். இவர்களில் 2,703 ஆண்களும் 2,410 பெண்களும் இருந்தனர்.[1]
காரக் கலன் மற்றும் காரக் குர்த் ஆகிய கிராமங்கள் அருகருகே இருப்பதால், இரண்டிற்கும் இடையே ஒரு எல்லையை அடையாளம் காண்பது கடினமாகும். காரக் குர்த்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலம் தாதி தமோலி தேவி மற்றும் உத்தம்வாலா (உத்திமாலா) ஆகியனவாகும். இக்கோயில் கிராமத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு பெரிய கோயிலாகும். பெரும்பாலான கிராமவாசிகள் விவசாயம், மற்றும் வணிகத்தை அவர்களின் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். தாதரி ஊட்டி கால்வாய் இப்பகுதியில் விவசாய நீர்ப்பாசனத்திற்கான முக்கிய ஆதாரத்தை வழங்குகிறது.
காரக் குர்து கிராம சாலை மற்றும் தொடருந்து வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கலிங்கா என்ற அருகிலுள்ள கிராமம், காரக்கிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அரசியல்
பாரதிய சனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பிசும்பர் வால்மீகி, காரக் குர்து தொகுதியை சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Kharak Khurd village". Census of India. Retrieved 23 July 2015.
- ↑ "Haryana Assembly Polls: Bishamber Singh Balmiki, Bawani Khera (Reserved) MLA". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-09-17. Retrieved 2021-03-06.