கா. சுப்ரவேலு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கா. சுப்ரவேலு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்எசு. வடிவேல்
பின்னவர்கே. பாலசுப்பிரமணியன்
தொகுதிசீர்காழி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-11-17)17 நவம்பர் 1932
காத்திருப்பு
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சீர்காழி
தொழில்விவசாயி

கா. சுப்ரவேலு (K. Subravelu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் காத்திருப்பு கிராமத்தினைச் சேர்ந்தவர். மயிலாடுதுறை கூரைநாடு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இதன் பின்னர் சுப்ரவேலு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிக் கல்வியினை முடித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: சீர்காழி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கா. சுப்ரவேலு 34,281 43.38% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. கே. பாலசுப்பிரமணியன் 29,405 37.21% புதியவர்
காங்கிரசு கே. வைத்திலிங்கம் 8,503 10.76% -31.98
ஜனதா கட்சி டி. கைலாசம் 6,405 8.10% புதியவர்
சுயேச்சை எம். குருசாமி 440 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,876 6.17% -4.34%
பதிவான வாக்குகள் 79,034 70.10% -6.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 114,299
இந்திய கம்யூனிஸ்ட் இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -9.87%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 434-435.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=கா._சுப்ரவேலு&oldid=320971" இலிருந்து மீள்விக்கப்பட்டது