கா. செல்லப்பன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கா. செல்லப்பன் (K. Chellappan, 1936 – 9 செப்டெம்பர் 2024) என்பவர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கோரா புதினத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர் ஆவார்.[1] இவருக்கு இவ்விருது 18 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.[2][3]

இளமை

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் காசி விசுவநாதன் சௌந்தரம்மாள் தம்பதியருக்கு 1936-ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்த செல்லப்பன், ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் பழம்புதுமை புதுப்பழமை, திருக்குறள் முதல் கிரிக்கெட் வரை, விடுதலைச் சிட்டும் புரட்சிக்குயிலும், ஒப்பியல் தமிழ், ஒப்பிலக்கிய கொள்கைகளும் செயல்முறைகளும் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.[4][5] உடல்நலக்குறைவால் 2024 செப்டம்பர் 9 அன்று இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கா._செல்லப்பன்&oldid=320974" இலிருந்து மீள்விக்கப்பட்டது