கிலிரியாத்
Jump to navigation
Jump to search
கிலிரியாத் (Khliehriat), வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள iகிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், கிராம ஊராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான சில்லாங்கிற்கு தென்கிழக்கில் 86.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60 குடியிருப்புகள் கொண்ட கிலிரியாத் கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 327 ஆகும். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 33.03% வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 19.63% ஆக உள்ளது. இக்கிராமத்தினர் அனைவரும் பட்டியல் பழங்குடிகள் ஆவார்.[1]