குளமாவு அணை
Jump to navigation
Jump to search
| குளமாவு அணை | |
|---|---|
| படிமம்:View on Kulamavu Dam Reservoir.jpg குலமாவு அணை நீர்த்தேக்கம் | |
குளமாவு அணை (கேரளம்) குளமாவு அணை (தமிழ்நாடு) | |
| நாடு | இந்தியா |
| அமைவிடம் | கேரளம், இடுக்கி, குலமாவு |
| புவியியல் ஆள்கூற்று | 9°48′10.59″N 76°53′46″E / 9.8029417°N 76.89611°E |
| நோக்கம் | நீர்மின் |
| நிலை | செயல்பாட்டில் உள்ளது |
| கட்டத் தொடங்கியது | 30 ஏப்ரல் 1969 |
| திறந்தது | பெப்ரவரி 1977 |
| உரிமையாளர்(கள்) | கேரள மாநில மின்சார வாரியம் |
| அணையும் வழிகாலும் | |
| வகை | ஈர்ப்பு, கொத்து |
| தடுக்கப்படும் ஆறு | பெரியாறு |
| உயரம் (அடித்தளம்) | 100 m (328 அடி) |
| நீளம் | 385 m (1,263 அடி) |
| அகலம் (உச்சி) | 220 அடி (67 m) |
| கொள் அளவு | 620,300 m3 (811,300 cu yd) |
| வழிகால் வகை | UG |
| வழிகால் அளவு | 1,600 m3/s (57,000 cu ft/s) |
| நீர்த்தேக்கம் | |
| நீர்ப்பிடிப்பு பகுதி | 38 கி.மீ.2 |
| இயல்பான ஏற்றம் | 2,500 அடி (760 m) |
| சுழலிகள் | 6 x 130 MW Pelton-type |
| நிறுவப்பட்ட திறன் | 780 MW |
குளமாவு அணை (Kulamavu Dam) என்பது பெரியாறு ஆற்றின் ஈர்ப்பு / கொத்து அணை ஆகும். இது இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள இடுக்கி நீர் மின் ஆற்றல் திட்டத்துடன் தொடர்புடைய மூன்று அணைகளில் ஒன்றாகும்.[1] இந்த அணையானது தொடுபுழா - புலியன்மலா மாநில நெடுஞ்சாலை ( எஸ்.எச்-33 ), 23 இல் இமைந்துள்ளது. இது இடுக்கி அணையிலிருந்து, 22 கி.மீட்டர் தொலைவிலும், செறுதோணி அணையிலிருந்து 22 கி.மீ. (14 மை) தொலைவிலும், தொடுபுழாவிலிருந்து 38 கி.மீ (24 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.
இடுக்கி, செறுதோணி மற்றும் குலமாவு அணைகள் 33 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளன. இந்த மூன்று அணைகளின் கட்டுமானமானது 60 கி.மீ.² செயற்கை ஏரியை உருவாக்குகிறது. இதில் சேமிக்கப்படும் நீரானது மூலமட்டத்தில் உள்ள மின் நிலையத்தில் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது .
மேலும் காண்க
குறிப்புகள்
- ↑ "Dam" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2015-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150819084557/http://idukki.nic.in/dam-hist.htm.
வெளி இணைப்புகள்
- குலமாவு (இபி) அணை தரவு பரணிடப்பட்டது 2018-04-19 at the வந்தவழி இயந்திரம்
