குழ. செல்லையா
குழ. செல்லையா | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் பேராவூரணி | |
| பதவியில் 15 மார்ச் 1971 – 31 சனவரி 1976 | |
| தொகுதி | பேராவூரணி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | முதுகாடு , பேராவூரணி தமிழ்நாடு, இந்தியா |
| அரசியல் கட்சி | அ.தி.மு.க |
| வாழிடம்(s) | தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| வேலை | அரசியவாதி மற்றும் தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் |
குழ. செல்லையா (சொல்லரசு என்றும் அழைக்கப்பட்டார்) (மறைவு: 23 நவம்பர் 2017) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியும், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
இவர் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியையடுத்த முதுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்.[1] தொடக்கத்தில் திமுகவில் இருந்த இவர். 1971 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு அளிக்கப்படாததால் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
பின்னர், எம். ஜி. ஆர் அதிமுகவை தொடங்கியபோது, அதன் விண்ணப்பப் படிவத்தில் எம்ஜிஆர் முதலாவதாகவும், குழ. செல்லையா ஐந்தாவது நபராகவும் கையெழுத்திட்டார். பின்னர் அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளராக இருந்தார். இடையில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராகவும் செயல்பட்டார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "முன்னாள் எம்எல்ஏ குழ.செல்லையா காலமானார்". செய்தி. தினமணி. 24 நவம்பர் 2017. Retrieved 28 சூலை 2018.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 65-66.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "அதிமுக தொடங்கியபோது எம்ஜிஆருடன் இருந்தவர்: முன்னாள் எம்எல்ஏ காலமானார்". செய்தி. இந்து தமிழ். 24 நவம்பர் 2017. Retrieved 28 சூலை 2018.