கெர்டி தி டக்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கெர்டி தி டக்
ஓவியர்குவெண்டோலின் கில்லன்[1]
ஆண்டு1997 (1997)
இடம்Milwaukee
ஆள்கூற்றுகள்43°2′19″N 87°54′37″W / 43.03861°N 87.91028°W / 43.03861; -87.91028

கெர்டி தி டக் (Gertie the Duck) என்பது அமெரிக்காவின், விஸ்கொன்சின், மில்வாக்கி நகரின் ஒரு வரலாற்றுச் சின்னமாகும். இது அமெரிக்க கலைஞர் குவெண்டோலின் கில்லனால் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட 4-அடி (1.2 மீ) உயரச் சிலையாகும்[1]. இச்சிலை 1997 செப்டம்பரில் விஸ்கான்சின் அவென்யூ பாலத்தின் ஒரு பகுதியில் நிறுவப்பட்டது.

ஆறு வாத்து குஞ்சுகளைப் பொரிக்க அந்த தாய் வாத்து செய்த முயற்சிகளின் கதை, இரண்டாம் உலகப் போரின் முடிவில் போரினால் சோர்வடைந்த பல அமெரிக்கர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. கெர்டியின் செய்திகள் உள்ளூர் செய்தித்தாளில் 37 நாட்கள் நாள்தோறும் தொடர்ந்து வெளிவந்தது. மில்வாக்கி முதலில், மாநிலம் மற்றும் இறுதியில் நாடு முழுவதும் வாழும் மக்களைக் கவர்ந்தது.[2]

வரலாறு

கெர்டியின் கதை மில்வாக்கி ஜர்னல் இதழின் புற எழுத்தாளர் கோர்டன் மெக்குவாரி, விஸ்கான்சின் அவென்யூ பாலத்தின் கீழ் ஒரு மரக் குவியலில் ஒரு காட்டு வாத்து கூடு கட்டியுள்ளதாக 1945 ஏப்ரலில் அறிவித்தபோது தொடங்கியது.[3] அந்த வாத்து மொத்தம் ஒன்பது முட்டைகளை இட்டிருந்தது. மேலும் அந்த வாத்து தன் கூட்டை விழிப்புடன் பாதுகாத்து வந்தது. பார்வையாளர்களும், வாகன ஓட்டிகளும் நாள்தோறும் பாலத்தின் மீது நின்று அடைகாத்துவரும் வாத்தை கண்டு வந்தனர். கெர்டிக்கு அன்னையர் நாள் வாழ்த்து அட்டைகளையும் வழங்கினர். கெர்டிக்கும் அதன் குஞ்சுகளுக்கும் எவ்வித ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக மில்வாகி நகரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இணைந்து ரோந்துப்படை ஒன்றை உருவாக்கினர். மில்வாக்கி அடைகாத்த ஒன்பது முட்டைகளில் இறுதியில் ஆறு முட்டைகள் குஞ்சு பொரித்து வெளிவந்தன.[4]

ஜெர்டியையும் அதன் கூட்டையும் ஜர்னல் மற்றும் உள்ளூர் போட்டியாளரான மில்வாக்கி சென்டினல் ஒளிப்படம் எடுத்தனர். இது லைஃப் இதழில் இடம்பெற்றது, மேலும் ஐக்கிய இராச்சியத்தின் டெய்லி எக்ஸ்பிரஸில் முதல் பக்கக்த்தில் இடம்பெற்றது.[5] ரீடர்ஸ் டைஜஸ்ட் "மில்வாக்கியின் பிரபலமான வாத்து" என்ற தலைப்பில் கெர்டியைப் பற்றிய ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது.[6]

வெள்ளம், புயல், அருகில் சில தீ விபத்துகள் என்ற இடர்கள் ஏற்பட்டபோதிலும், ஐந்து வாத்து குஞ்சுகளும் கெர்டியும் அந்த இகட்டான தருணங்களில் இருந்து தப்பிப்பிழைத்தன. மேலும் அருகிலுள்ள கிம்பல்ஸ் பல்பொருள் அங்காடியின் சாளரத்தில் வாத்தைப் பார்வையிட வசதிகள் செய்யபட்டன. அங்கிருந்து அந்த வாத்துக் குடும்பத்தை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் எட்டிப் பார்த்தனர். கெர்டியும் அதன் குஞ்சுகளும் ஏரிக்கரையில் உள்ள ஜூனோ பூங்கா தடாகத்திற்கு கொண்டு செல்லபட்டன.[2]

பரவலர் பண்பாட்டில்

படிமம்:Jan Shepard GE True Gertie the Great 1963.JPG
கெர்டி தி கிரேட் படத்திற்கான விளம்பரப் படம்

கெர்டியின் கதையை அடிப்படையாகக் கொண்ட முதல் புத்தகம் தி ஸ்டோரி ஆஃப் 'கெர்டி' என்பது ஆகும். இது 1945 ஜூலையில் ஜர்னலால் வெளியிடப்பட்டது.[7] இந்தப் புத்தகம் அதன் தினசரி செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்த புத்தகம் 1946 இல் நியூயார்க்கின் ரைன்ஹார்ட் & கோ.வால் மறுபதிப்பு செய்யப்படன.</ref>[8]

அதே ஆண்டில், மில்வாக்கியைச் சேர்ந்த பொம்மை தயாரிப்பாளர் ஏர்ல் எஃப். வென்ட், மல்லார்டு வாத்தின் பெயரிலான வாத்தின் மர பொம்மைகளைத் தயாரித்தார்.[9]

1959 ஆம் ஆண்டில், மில்வாக்கி பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்களான நிக்கோலஸ் பி. ஜார்ஜியாடி மற்றும் லூயிஸ் ஜி. ரோமானோ ஆகியோர் கெர்டி தி டக் என்ற பெரயிலான குழந்தைகளுக்கான புத்தகத்தை எழுதினர்.[10] இந்தப் புத்தகம் 800,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானது. பிறகு 1988 இல் மறுவெளியீடு செய்யப்பட்டு ஆறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.[2]

1963 ஆம் ஆண்டு அமெரிக்கத் தொலைக்காட்சியான ஜி.இ. ட்ரூ இல் "Gertie the Great" என்ற பகுதியில் கெர்டியின் கதை கூறப்பட்டது, இதில் ஜான் ஷெப்பர்ட் குஞ்சு பொறிப்பதை பற்றிய செய்களைச் சேகரிக்கும் செய்தியாளராக நடித்தார். [11]

சிற்பம்

கெர்டி தி டக் என்பது சிற்பி குவெண்டோலின் கில்லன் உருவாக்கிய 4 அடி உயர (1.2 மீ) வெண்கல காட்டு வாத்து சிற்பமாகும். இந்த சிற்பம் $15,000 செலவில் உருவாக்கப்பட்டது. இது எப்ஸ்டீன் உஹென் கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தால் நகரத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 1997 செப்டம்பரில் சிலை நிறுவப்பட்டது. இது மில்வாக்கி நகர மையத்தில் மில்வாக்கி ஆற்றின் மீது உள்ள விஸ்கான்சின் அவென்யூ பாலத்தின் வடமேற்குப் பக்கத்தில் உள்ளது.[12][13][4] இந்த சிற்பம் ரிவர்ஸ்கல்ப்ச்சர் எனப்படும் கலை காட்சிகளின் ஒரு பகுதியாகும்!

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Collins, Bob (2017-02-01). "Gwen Gillen was much more than the Mary Tyler Moore statue". Minnesota Public Radio. http://blogs.mprnews.org/newscut/2017/02/gwen-gillen-was-much-more-than-the-mary-tyler-moore-statue/. 
  2. 2.0 2.1 2.2 Sandin, Jo. "Home Sweet Home". The Milwaukee Journal, March 31, 1995.
  3. Bauer, Fran. "Gertie co-author remembers famous fowl". Milwaukee Journal Sentinel, December 1, 1997, p. B3.
  4. 4.0 4.1 Gould, Whitney. "Mallard memorialized Gertie, City's Famed duck gets statue in her honor". Milwaukee Journal Sentinel, September 25, 1997 Final, p. B1.
  5. "Mallard's Fame Spans Sea for Story in London". The Milwaukee Journal, June 14, 1945, p. A1.
  6. Johnson, Don L. "'Millie' Finds City Life Just Ducky". Milwaukee Sentinel, May 28, 1980 Final, p. A1.
  7. "'Gertie' Books Sold Out". The Milwaukee Journal, July 15, 1945, p. A1.
  8. Eaton, Anne T. "For Younger Readers". The New York Times, March 10, 1946.
  9. "Gertie Reappears as Toy Made by Firm Here". The Milwaukee Journal, September 5, 1946, p. A10.
  10. Uebelherr, Jan. "Immortalizing Gertie the Duck". Milwaukee Journal Sentinel, March 1, 2001 Final, p. A2.
  11. "(photo)". Scranton Tribune (Scranton, Pennsylvania): p. TV-3a. April 13, 1963. https://www.newspapers.com/clip/122932157/photo/. பார்த்த நாள்: April 15, 2023. 
  12. "Milwaukee, WI - Gertie the Duck, Symbol of Hope." Roadside America - Guide to Uniquely Odd Tourist Attractions. Web. 18 May 2011. http://www.roadsideamerica.com/tip/5941.
  13. Ratterman, Bob. "Memories of the 1940s (1999-2004 Archive): WWII Gertie the Milwaukee Duck." Youth Net - http://youth.net/. Oxford Press, 13 May 1999. Web. 18 May 2011. "Archived copy". Archived from the original on 2010-06-15. Retrieved 2010-01-02.{{cite web}}: CS1 maint: archived copy as title (link).
"https://tamilar.wiki/w/index.php?title=கெர்டி_தி_டக்&oldid=338172" இலிருந்து மீள்விக்கப்பட்டது