கோசாலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:FirstGaushala.jpg
உலகின் முதல் பசுமடம், ரேவாரி

கோசாலை அல்லது பசுமடம் (ஆங்கிலம்:Goshala; இந்தி: गौशाला, உரோமானியம் gauśālā) என்பது இந்தியாவில் தெருகளில் அலைந்து திரியும் பசுக்களுக்கான பாதுகாப்பு தங்குமிடங்கள் ஆகும். இந்தியாவில் உள்ள பசு உறைவிடங்களின் முதன்மை வருமான ஆதாரமாக அரசு மானியங்களும் நன்கொடைகளும் உள்ளன. 2014 முதல், இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியா 2014 முதல் 2016 வரை இரண்டு ஆண்டுகளில் பசு தங்குமிடங்களுக்காக 5,8 பில்லியன் டாலர் (69 அமெரிக்க டாலர்) செலவிட்டுள்ளது.[1]

விளக்கம்

கோஷலா என்ற சமசுகிருத வார்த்யில் கோ என்றால் பசு என்றும் ஷாலா என்றால் தங்குமிடம் என்றும் பொருள். எனவே கோஷாலா என்றால் பசுக்களுக்கான தங்குமிடம் என்று பொருள்.[2]

படிமம்:Gosala in Guntur, India.jpg
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் உள்ள பசுமடம்
படிமம்:Goshala-ISKCON.jpg
மேற்கு வங்காளத்தின் மாயாபூர் இசுகான் கோயில் வளாகத்தில் உள்ள பசுமடம்

வரலாறு

படிமம்:Jawaharlal Nehru visiting a Goshala during his Gujarat tour in 1949.jpg
பிரதமர் ஜவகர்லால் நேரு 1949இல் குசராத்து மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள பசுமடத்தில்

முதல் கௌரக்ஷினி சபை 1882ஆம் ஆண்டில் பஞ்சாபில் நிறுவப்பட்டது.[3] இந்த இயக்கம் வட இந்தியா, வங்காளம், பம்பாய், மெட்ராஸ் மாகாணங்கள் மற்றும் பிற மத்திய மாகாணங்களுக்கும் வேகமாக பரவியது. இந்த அமைப்பு அலைந்து திரிந்த பசுக்களை மீட்டு கௌஷலாக்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் அவற்றை வளர்க்க மீட்டெடுத்தது. தனிநபர்களிடமிருந்து அரிசியை சேகரிக்கவும், பங்களிப்புகளைச் சேகரிக்கவும், கோசாலைக்கு நிதியினைப் பெறவும், இங்கு வளர்க்கப்படும் பசுக்களை விற்கவும் வட இந்தியா முழுவதும் தொண்டு நிறுவன வலையமைப்புகளை உருவாக்கின. பசுவினைப் பலியிடுவதைச் தடை செய்யக் கோரி சில இடங்களில் 350,000 வரை கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.[4] 1880க்கும் 1893க்கும் இடையில் நூற்றுக்கணக்கான பசுமடங்கள் திறக்கப்பட்டன. பாத்மேடா கோதம் இந்தியாவின் மிகப்பெரிய மடமாகும். இதில் 85,000க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன.[5] இந்த கோசாலை தெற்கு இராசத்தானில் உள்ள பாத்மேடா என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது.[6]

அரசு நிதியுதவி

2014ஆம் ஆண்டில் இந்தியாவில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 2014 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் பசு தங்குமிடங்களுக்காக 5,8 பில்லியன் டாலர் (69 அமெரிக்க டாலர்) செலவிட்டுள்ளது.

பயனற்ற பசுக்கள் இறைச்சிக் கூடத்திற்கு அனுப்பப்படுவதைத் தடுக்க, அரசாங்கம் 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இராச்ட்டிரிய கோகுல் திட்டத்தினைத் தொடங்கியது. இது முதிர்ச்சியடைந்து பசுக்களுக்கு புகலிடங்களைக் கட்டுவதை உள்ளடக்கிய ஒரு தேசிய திட்டமாகும். விலங்குகளின் உடல் கழிவுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் அவற்றின் பராமரிப்புக்காக செலவிடப்படுகிறது. மே 2016இல், இந்திய தேசிய அரசு பசுமடங்கள் குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது. பல்வேறு நோக்கங்களுக்காக பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கான பசுமடங்கள் பொருளாதாரத்திற்கான ஒரு திட்டத்தினை உருவாக்க நிதி ஆயோக் செயல்பட்டு வருகிறது.[7]

பிற வருமான ஆதாரங்கள்

படிமம்:Dung cake on walls, Varanasi, Uttar Pradesh, India (2002).jpg
எருவரட்டிக்காக வாரணாசியில் சுவரில் மாட்டு சாணம் அப்பப்பட்டுள்ளது

அன்பளிப்புகளே பசுமடங்களின் பிரதான வருமான மூலங்கள் ஆகும். ஒரு சில பசுமடங்களில் நடனமும் யோகாவும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.[8]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Cow urine can sell for more than milk in India". Bloomberg.com. 2016-07-18. Retrieved 2016-09-18.
  2. "300 cattle head for goshala everyday". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-08-17. Archived from the original on 2013-11-10. Retrieved 2013-02-06.
  3. The Making of an Indian Metropolis, Colonial governance and public culture in Bombay, 1890/1920, Prashant Kidambi, p. 176, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7546-5612-8.
  4. Vishnu's crowded temple, India since the great rebellion, pp. 67-69, Maria Misra, 2008, Yale University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-13721-7.
  5. "Report of the National Commission on Cattle - Chapter I (10. Beginning of mass protests against cow-killings)". Dahd.nic.in. Archived from the original on 27 September 2013. Retrieved 10 November 2013. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  6. Gupta, Abhinav (2016-04-13). "Shri Pathmeda Godham Mahatirth: World's largest cowshed". www.indiatvnews.com (in ஆங்கிலம்). Retrieved 2022-02-08.
  7. Sharma, Yogima Seth. "Niti Aayog working on road map to develop Gaushala economy". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/economy/policy/niti-aayog-working-on-road-map-to-develop-gaushala-economy/articleshow/89145535.cms. 
  8. "Shri Shaktidarshan Yogashram". Retrieved 2021-03-01.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோசாலை&oldid=343404" இலிருந்து மீள்விக்கப்பட்டது