கோடி சூர்ய பிரபா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரபா
பிறப்புகோடி சூர்ய பிரபா
தெனாலி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1]
மற்ற பெயர்கள்ஜெயபிரபா
பணிநடிகை, குச்சுப்பிடி நடனக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1974 ம் முதல்
வாழ்க்கைத்
துணை
ரமேஷ்

.

கோடி சூர்ய பிரபா என்ற பிரபா, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞரும் திரைப்பட நடிகையுமாவார். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் நூற்று இருபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிரபா நடித்துள்ளார். [1] [2] பிரபல ஆந்திர மாநில நடிகர்களான என்.டி.ராமராவ் மற்றும் அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள பிரபா, இரண்டு நந்தி விருதுகளையும் வென்றுள்ளார்.

திரைவாழ்க்கை

குச்சிப்புடி நடன கலைஞராக

தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தெனாலியில் பிறந்த  இவரது தந்தை பெயர் சுப்ரமணியம், மற்றும் தாயார் பெயர் ஸ்ரீ ரமணம்மா ஆகும்.  பிரபா தனது ஆரம்பக் கல்வியை சென்னையில் உள்ள பாம்பினோ பள்ளியில் பயின்றார்.  அப்போதிலிருந்தே குச்சிப்புடி நடனம் முழுநேரமாக கற்க ஆரம்பித்தார். ஆனால் இவரது குச்சிப்புடி நடன அரங்கேற்றமும்  திருமணமும் ஒரே நேரத்தில் தான் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட நாற்பதற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [3]

திரைப்படவியல்

தெலுங்கு

  •  நீடா லெனி ஆதாதே (1974) - தெலுங்கில் அறிமுகம்
  • பூமி கோசம் (1974)
  • அம்மாயிலு ஜாக்ரதா (1975)
  • அன்னதம்முல கதா (1975)
  • ராமையா தந்திரி (1975)
  • ஆதவரில்லு (1976)
  • மகாகவி க்ஷேத்ரய்யா (1976) ருக்மணியாக (முதல் நந்தி விருது)
  • விந்தா இல்லு சாந்த கோலா (1976)
  • மான்சிகி மாரோ பெரு (1976) சந்திரிகாவாக
  • தான வீர சூர கர்ணா (1977)
  • சாவித்திரியாக தேவதலாரா தீவின்சாந்தி (1977).
  • ஆமே கதா (1977)
  • ஜகன்மோகினி (1978)
  • டோங்காலா டோபிடி (1978)
  • மஞ்சி மனசு (1978)
  • இந்திண்டி ராமாயணம் (1979)
  • மா வூரி தேவதா (1979)
  • கோரிகலே குர்ரலைட் (1979)
  • கந்தர்வ கன்யா (1979)
  • சம்சார பந்தம் (1980)
  • ஸ்ரீ விநாயக விஜயமு (1980) பிரியம்வதாவாக
  • சந்தியா ராகம் (1981)
  • பார்வதி பரமேஷ்வர்லு (1981) சுனிதாவாக
  • நேனு மா ஆவிதா (1981)
  • சந்தோஷி மாதா விரத மஹாத்யம் (1983)
  • ஸ்வப்னாவாக சிம்ஹம் நவ்விந்தி (1983).
  • பத்மவியூஹம் (1984)
  • ரோஜுலு மராயி (1984)
  • மனிஷிகோ சரித்ரா (1984)
  • ஸ்ரீ தத்த தரிசனம் (1985) சுமதியாக
  • பலே தம்முடு (1985)
  • தந்த்ரா பாப்பராயுடு (திரைப்படம்) (1986)
  • ஆத்ம பந்துவுலு (1987)
  • முக்குரு கொடுக்குலு (1988)
  • பிரம்ம புத்ருடு (1988)
  • மாயா பஜார் (1995)
  • கொண்டப்பள்ளி ரத்தையா (1995)
  • சாலா பகுண்டி (2001)
  • ராகவேந்திரா (திரைப்படம்) (2003) ராகவாவின் தாயாக
  • கபீர்தாஸ் (2003)
  • வெகு சுக்கலு (2004)
  • லட்சுமி கல்யாணம் (2007)
  • கிக் (2009)
  • நாகவல்லி (2010) பார்வதி தேவியாக
  • ஊ கொடதாரா? உலிக்கி படாதரா? (2012) ரிஷி குமாரின் தாயாக
  • ரெபெல் (2012)
  • ஜேம்ஸ் பாண்ட் (2015) வசுந்தராவாக
  • ருத்ரமாதேவி (2015)
  • பெங்கால் புலி (2015)
  • என்டிஆர்:கத்தநாயகுடு (2018)
  • காகதீயுடு (2019)பிரதி ரோஜு பாண்டேஜ் (2019)

தமிழ்

மலையாளம்

கன்னடம்

தொலைக்காட்சி தொடர்

  • ஆனந்தம் (2007-2009, தமிழ்) சாருலதா/முத்துலட்சுமி
  • கலாசி உண்டே கலடு சுகம் (2021-தற்போது, தெலுங்கு) கீதாவாக

விருதுகள்

  • சிறந்த துணை நடிகை - தர்ம வட்டி (1981)
  • சிறப்பு நடுவர் விருது - வெகு சுக்கலு (2003)
  • நந்தி விருதுகள் [4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 MAA, Stars. "Prabha profile". maastars.com. Movie Artists Association. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
  2. Y, Sunita Chowdhary. "Prabha". cinegoer.net. Cinegoer. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
  3. Y, Sunitha Chowdhary. "Back in the lime light". Kasturi and Sons. http://www.thehindu.com/features/cinema/back-in-the-limelight/article2134360.ece. பார்த்த நாள்: 8 July 2016. 
  4. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.(in Telugu)
"https://tamilar.wiki/index.php?title=கோடி_சூர்ய_பிரபா_(நடிகை)&oldid=22620" இருந்து மீள்விக்கப்பட்டது