கோட்டம்பலம்
Jump to navigation
Jump to search
கோட்டம்பலம் என்பது சேரநாட்டில் இருந்த ஊர். இக்காலத்தில் இது கேரள மாநிலத்தில் அம்பலப்புழை என்னும் பெயருடன் விளங்குகிறது. கோடு என்றால் மலை. சேரநாடு மலைகளை மிகுதியாக உடைய நாடு. அம்பலம் என்பது ஊரின் பெயர்.[1]
சங்ககால மருத்துவ மனைகள் இருந்த ஊர்களில் இதுவும் ஒன்று. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை இவ்வூரில் மருத்துவம் செய்துகொண்டான்.