கோரேசுவர்
Jump to navigation
Jump to search
கோரேசுவர் Goreswar | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 26°32′N 91°44′E / 26.54°N 91.73°E | |
| நாடு | |
| மாநிலம் | அசாம் |
| மண்டலம் | கீழ் அசாம் கோட்டம் |
| மாவட்டம் | பாக்சா மாவட்டம் |
| ஏற்றம் | 42 m (138 ft) |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வம் | போடோ மொழி, அசாமிய மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 781366 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
| வாகனப் பதிவு | AS |
| இணையதளம் | baksa |
கோரேசுவர் (Goreswar) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பக்சா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும். 2004 ஆம் ஆண்டு வரை முந்தைய காமரூப் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இந்நகரம் இருந்தது. பிரம்மபுத்திரா நதியின் வடக்குக் கரையில் கோரேசுவர் நகரம் அமைந்துள்ளது. ரங்கியா மற்றும் பைகாட்டா நகரங்களால் கோரேசுவர் நகரம் சூழப்பட்டுள்ளது.[1]
போக்குவரத்து
கோரேசுவர் நகரம் தேசிய நெடுஞ்சாலை 31 சாலைக்கு வடக்கே அமைந்துள்ளது. வழக்கமான பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து முறைகளுடன் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கோரேசுவர் இரயில் நிலையம் இப்பகுதியில் உள்ள முக்கிய ரயில் நிலையமாகும்.[2]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Goreswar". pincode.org.in. Retrieved 2015-09-18.
- ↑ "Goreswar Railway Station Picture & Video Gallery - Railway Enquiry". indiarailinfo.com. Retrieved 2021-05-26.