கோல்டா மேயர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கோல்டா மேயர்
גולדה מאיר
படிமம்:Golda Meir 03265u.jpg
நான்காவது இசுரேலின் பிரதம மந்திரி
பதவியில்
17 மார்ச் 1969 – 3 சூன் 1974
குடியரசுத் தலைவர்சல்மான் சாசர்
எபிரைம் காட்சிர்
முன்னையவர்யிகல் அல்லான் (பதில்)
பின்னவர்இட்சாக் ரபீன்
வெளிநாட்டு அமைச்சர்
பதவியில்
18 சூன் 1956 – 12 சனவரி 1966
பிரதமர்டேவிட் பென்-குரியன்
லெவி எசுக்கோல்
முன்னையவர்மோசே சாரெட்
பின்னவர்அப்பா எபான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1898-05-03)3 மே 1898
கீவ், உருசியப் பேரரசு
இறப்பு8 December 1978(1978-12-08) (aged 80)
யெரூசலம், இசுரேல்
அரசியல் கட்சிAlignment
Mapai
தொழிற் கட்சி
துணைவர்மொரிசு மேயர்சன் (1917–1951)
முன்னாள் மாணவர்மில்வோக்கி விசுக்கோன்சின் அரசுக் கல்லூரி இப்போது விசுக்கோன்சின்-மில்வோக்கி பல்கலைக்கழகம்
சமயம்யூதம்

கோல்டா மபோவிச் (Golda Meir, மே 3, 1898டிசம்பர் 8, 1978) என்னும் இயற்பெயர் கொண்டவரும், 1917க்கும் 1956 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோல்டா மேயர்சன் என அறியப்பட்டவருமான கோல்டா மேயர் இசுரேலின் நான்காவது பிரதம மந்திரி ஆவார். தொழில் அமைச்சராகவும், வெளிநாட்டு அமைச்சராகவும் பணியாற்றிய பின்னர் 1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி இசுரேலின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டார். இசுரேலில் பிரதம மந்திரி பதவிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் இவர். உலகில் இவ்வாறான பதவி வகித்த பெண்களில் மூன்றாவது இடத்தில் இவர் உள்ளார். இங்கிலாந்தில் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் "இரும்புப் பெண்" என அழைக்கப்படுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே இசுரேல் அரசியலில் "இரும்புப் பெண்" என இவர் அழைக்கப்பட்டார். இசுரேலின் முன்னாள் பிரதமர் டேவிட் பென்-குரியன் இவரை "அரசின் மிகச் சிறந்த ஆண்" எனக் குறிப்பிட்டார். வலிமையான மன உறுதியும், நேரடியாகப் பேசும் பழக்கமும் கொண்ட இவரை யூத மக்களின் பாட்டி என்றனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=கோல்டா_மேயர்&oldid=345035" இலிருந்து மீள்விக்கப்பட்டது