சசி வத்வா
| சசி வத்வா | |
|---|---|
| பிறப்பு | 30 சூலை 1948 |
| தேசியம் | |
| பணியிடங்கள் | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரி, ஜபல்பூர் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் |
| ஆய்வு நெறியாளர் | வீணா பிஜ்லானி |
| முனைவர் பட்ட மாணவர்கள் | உடற்கூறியலும் நரம்பியல் மேம்பாடும் |

சசி வத்வா (Shashi Wadhwa) (பிறப்பு: சூலை 20, 1948) புது தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தலைவராவார். வளர்ச்சி நரம்பியல், அளவு உருவவியல் மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஆகியவை இவரது முக்கிய ஆராய்ச்சி ஆர்வங்களாகும். இவரது ஆய்வகம் முக்கியமாக வளரும் மனித மூளையில் கவனம் செலுத்தியது.[1][2][3][4][5]
கல்வி
சசி 1970இல் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், முதுகலை படிப்புகளுக்காக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உடற்கூறியல் துறையில் சேர்ந்தார்.[1]
இவர், பேராசிரியராக ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். இறுதியில் உடற்கூறியல் துறையின் தலைவரானார். 1972ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு கற்பித்தும் பயிற்சியும் அளித்துள்ளார். இவர் 67 சர்வதேச மற்றும் 37 தேசிய ஆராய்ச்சி வெளியீடுகள், 27 புத்தகங்கள் எழுதியும், 13 புத்தகங்களை திருத்தியும் வெளியிட்டுள்ளார்.[2]
அங்கீகாரம்
தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சகாவான சசி,[6] தனது பணிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 1990ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதையும் [1] 2013இல் பி.கே.பச்சாவத் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வென்றார்.[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "AIIMS Profile - Shashi Wadhwa". Retrieved 16 March 2014.
- ↑ 2.0 2.1 2.2 "Neuro Science Academy Profile - Shashi Wadhwa" (PDF). Archived from the original (PDF) on 16 March 2014. Retrieved 16 March 2014.
- ↑ "Answers lead to more questions" (PDF). Archived from the original (PDF) on 16 March 2014. Retrieved 16 March 2014.
- ↑ "Fellowship - Search Result". ias.ac.in. Retrieved 2014-03-16.
- ↑ "City briefs : Shashi Wadhwa is new dean of AIIMS - Indian Express". Archive.indianexpress.com. 2012-05-05. Retrieved 2014-03-16.
- ↑ "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. Retrieved 19 March 2016.