சாஜாபூர்
ஷாஜாபூர் (Shajapur), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சாஜாபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரமான போபால் நகரத்திற்கு மேற்கே 164.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சில்லார் ஆற்றின் கரையில் அமைந்த சாஜாபூர் நகரம், கடல் மட்டத்திலிருந்து 1453 அடி உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 29 வார்டுகளும், 13,066 குடியிருப்புகளும் கொண்ட ஷாஜாபூர் நகரத்தின் மக்கள் தொகை 69,263 ஆகும். அதில் 35,623 ஆண்கள் மற்றும் 33,640 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.37 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 920 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.47 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 14.02 % மற்றும் 1.41 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 63.93%, இசுலாமியர் 34.10%, சமணர்கள் 1.43%, கிறித்தவர்கள் 0.26% மற்றும் பிற சமயத்தினர் 0.25 % வீதம் உள்ளனர்.[1]