முனசந்தை ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>NeechalBOT
(தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவா...)
 
No edit summary
வரிசை 4: வரிசை 4:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இக்கட்டுரை தமிழ்நாடு அரசுத் தரவுகளிலிருந்து தானியக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தைத் தொகுக்கும் பயனர்கள் மாறிச் சரங்களை மாற்றாதிருக்குமாறு வேண்டுகிறோம். அவை சேதப்பட்டால் இற்றைப்படுவது தடைப்படும். மேலதிகத் தகவலுக்கு,  https://ta.wikipedia.org/s/4njs பார்க்கவும். அதே வேளை, இந்த ஊராட்சி பற்றிய கூடுதல் தகவலைத் தகுந்த ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் சேர்க்கலாம்.  
இக்கட்டுரை தமிழ்நாடு அரசுத் தரவுகளிலிருந்து தானியக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தைத் தொகுக்கும் பயனர்கள் மாறிச் சரங்களை மாற்றாதிருக்குமாறு வேண்டுகிறோம். அவை சேதப்பட்டால் இற்றைப்படுவது தடைப்படும். மேலதிகத் தகவலுக்கு,  https://ta.wikipedia.org/s/4njs பார்க்கவும். அதே வேளை, இந்த ஊராட்சி பற்றிய கூடுதல் தகவலைத் தகுந்த ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் சேர்க்கலாம்.  
மக்கள் தொகை:
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முனசந்தையில் மட்டும் மொத்த மக்கள் தொகை 635. இவற்றில் 307  ஆண்களும், 328 பெண்களும் உள்ளனர். இங்கு இந்து மதம் மற்றும் இஸ்லாம் மதமும் உள்ளது. இந்துக்களில் அனைத்து வகையான மக்களும் இங்கு வாழ்கின்றனர்.
வேலை வாய்ப்பு:
இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இங்கு ஆற்றுப் பாசன வசதி கிடையாது, இருப்பினும் இங்கு இரண்டு போகம் நெற்பயிறும் ஒரு போகம் எள், உழுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம் மற்றும் வெள்ளரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அணைத்து வகையான விவசாயத்திற்கும் கண்மாய்கள் மற்றும் கிணற்று நீரை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இங்கு கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிணறுகள் உள்ளன. அணைத்து கிணற்றிலும் மக்கள் குளிப்பதற்கு ஏற்ப்ப படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அறுபதுக்கும் மேற்பட்ட கிணறுகள் தமிழக அரசின் இலவச மின்மோட்டார் மற்ற கிணறுகள் டீசல் என்ஜினும் பயன்படுத்துகின்றனர். இங்கு உள்ள மக்கள் விவசாயத்தையே நம்பி இருப்பதனால் நிலத்தடி நீர் மட்டம் கருதி இதுவரை ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படவில்லை.
ஊரின் அமைவிடம்:
தேக்காட்டூர் ஊராட்சி, பெருங்குடி ஊராட்சி,கடையக்குடி ஊராட்சி மற்றும் இராயவரம் ஊராட்சி ஆகியவற்றின் நடுவில் அமைந்துள்ளது. முப்போகமும் இங்கு பயிர் சாகுபடி செய்வதனால் பசுமை நிறம் மாறாமல் காட்சியளிக்கிறது. ஊரைச்சுற்றி  கண்மாயும் வயல்வெளியும் அமைந்துள்ளது. இவற்றின் குறுக்கே இராயவரத்திலிருந்து கடையக்குடி வழியாக புதுக்கோட்டை சமஸ்தானம் செல்ல ஊராட்சி ஒன்றிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊரின் தெற்கே பொண்ணாட்சி கண்மாயும், மேற்க்கே மேலக்கண்மாய் மற்றும் கோவிஞ்சக்கண்மாயும் உள்ளது. இந்த மூன்று கண்மாயின் நீர் பாசன வசதி போக உபரி நீர் ஊரின் கிழக்கே உள்ள பெருங்குடியாண்கண்மாய்க்கு செல்கிறது. இங்குள்ள அணைத்து கண்மாயும் நீரின் அளவுக்கு ஏற்ப மீன்கள் வளர்க்கப் படுகின்றன. சாலையின் இருபுறமும் மா, பலா, கொய்யா போன்ற மரங்கள்  பார்ப்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றது.
போக்குவரத்து வசதி:
புதுக்கோட்டையில் இருந்து இவ்வூர் வழியாக 9A மற்றும் 9D பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முனசந்தையில் இருந்து புதுக்கோட்டை பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இரயில் நிறுத்தம் முனசந்தையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் ஆராங்கல் மற்றும் புதுக்கோட்டையும் உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது.
ஆலயங்கள்:
இங்கு புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் ஊரின் நடுவே வடக்கு பார்த்தது அமைந்துள்ளது. ஊரின் காவல் தெய்வமாக தென்மேற்கில் அருள்மிகு ஸ்ரீ பனைஉடைய அய்யனார் கோவிலும், வடமேற்கில் சப்தகன்னிமார்களும் தென்கிழக்கில் ஆவுடையப்பன் கோவிலும், ஊரின் மேற்குப் புறத்தில் பெருமாள் கோவிலும், அகஸ்த்தீஸ்வரர் ஆலயமும் உள்ளது. இம்மூன்று கோவிலின் சிறப்பு என்னவென்றால் வெவ்வேறு இடங்களில் கிழக்கு பார்த்து மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளது
கோவில் தலவரலாறு:
1. ஸ்ரீ வீரமாகாளியம்மன்
இக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக் கோவில் பதினைந்து ஊர்களுக்கு சொந்தமானது. ஒவ்வொரு பங்குனி மாதமும் பத்து நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இத்தல விருட்சமாக அரசு மற்றும் வேம்பும் ஒருசேர உள்ளது. பங்குனி மாதம் என்றாலே இக்கோவிலை சேர்ந்த அனைத்து ஊர்களிலும் திருவிழாக் கோலம் தான். பங்குனி முதல் செவ்வாய்க்கிழமையன்று காப்புக் கட்டி மறு செவ்வாய் அன்று பொங்கல் விழாவும் பால்குடம், காவடி மற்றும் தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு மண்டகப்படி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இரவு மற்றும் காலையில் பூவலங்காரத்துடன் திருவீதி உலா வரும். இத் திருவிழாவின் முக்கியச் சிறப்பு ஒவ்வொரு நாள் காலையில் திருவீதி உலா முடிந்த பிறகு சாமி பிரசாதமும் காலாஞ்சியும் இஸ்லாமிய மக்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இவை இந்து மற்றும் இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை காட்டுகிறது.
2. பனைவுடைய அய்யனார் கோவில்:
இக்கோவிலுக்கு ஒவ்வொரு ஆடி மாதமும் வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரை நான்கு நாட்களுக்கு புரவி எடுப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழா மழை வரம் வேண்டி வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திருவிழாவின் போது வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி மற்றும் அரிச்சந்திர மயானகன்டம் நாடகங்கள் நடத்தப்படுகிறது.
3. அகஸ்த்தீஸ்வரர் ஆலயம்:
பழங்காலத்தில்  இங்கு வாழ்ந்த  அகத்திய முனிவர்கள் சிவலிங்கம் வைத்து வழிபட்டதாகவும், அதன் காரணமாகவே அக்கோவிலுக்கு அகஸ்த்தீஸ்வரர் என பெயர் பெற்றது என இக் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக் கோவிலின் விமானக் கூரை மற்றும் சுவர்களில் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீனும் வரையப்பட்டுள்ளது. இக் கோவில் தற்போது பராமரிப்பின்றி கோவில் கோபுரங்கள் முற்றிலும் இடிந்து மரங்கள் வளர்ந்த நிலையில் உள்ளது. இக்கோவிலின் விமானக்கூரைகள் மற்றும் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இக் கோவிலின் தலவிருட்சமாக வில்வம் மரமும் வேம்பும் உள்ளது. தமிழகத்தில் இத்திருத்தலத்தில் மட்டுமே  சிவபெருமான் லிங்கமாக மூலவராகவும், முருகன் வள்ளி தெய்வானையுடனும் தாய் பார்வதி தேவியுடனும் காட்சியளிப்பது மிகவும் சிறப்பு. இத்திருத்தலத்தில் மட்டுமே சிவபெருமான் குடும்பத்தோடு காட்சியளிக்கும் திருத்தலமாக உள்ளது. இதுமட்டுமின்றி இவ்வூரில் முனிவர்கள் வாழ்ந்து வந்ததாலும் பல இடங்களில் இருந்து முனிவர்கள் ஒவ்வொரு மாசி மாதம் மகா சிவராத்திரி தினத்தன்று இவ்வூரில் ஒன்று சேர்ந்தாலும் இந்த ஊருக்கு முனிவர்சந்தை எனப்பெயர் பெற்றது எனவும் பிற்க்காலத்தில் இவை பேச்சு வழக்கில் முனசந்தை என மாறியதாக இங்குள்ள பெரியவர்கள் கூறுகின்றனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  -->
  -->
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/72584" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி