சில்லெனைட்டு
| சில்லெனைட்டு Sillénite | |
|---|---|
செருமனியில் இருந்து சில்லெனைட்டு | |
| பொதுவானாவை | |
| வகை | ஆக்சைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | Bi12SiO20 |
| இனங்காணல் | |
| நிறம் | ஆலிவ் பச்சை, சாம்பல் பச்சை, மஞ்சள் பச்சை, மஞ்சள், செம்பழுப்பு |
| படிக இயல்பு | கனசதுரப் படிகங்கள் |
| படிக அமைப்பு | கனசதுரம் |
| மோவின் அளவுகோல் வலிமை | 1–2 |
| மிளிர்வு | பல்வண்ணம் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
| ஒப்படர்த்தி | 9.16 |
| ஒளியியல் பண்புகள் | சமதிசை |
| ஒளிவிலகல் எண் | >2.5 |
| இரட்டை ஒளிவிலகல் | இல்லை |
| கரைதிறன் | ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரையும் |
| மேற்கோள்கள் | [1][2][3] |
சில்லெனைட்டு அல்லது சில்லினைட்டு (Sillénite or sillenite) என்பது Bi12SiO20 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். இச்சேர்மத்தை சுவீடிய வேதியியலாளர் லார்சு கன்னார் சிலென் கண்டுபிடித்த காரணத்தால் அவர் பெயரே சூட்டப்பட்டது. பெரும்பாலும் இவர் பிசுமத் ஆக்சிசன் சேர்மங்கள் குறித்தே ஆய்வு செய்தார். இக்கனிமம் ஆத்திரேலியா, ஐரோப்பா, சீனா, யப்பான், மெக்சிகோ மற்றும் மொசாம்பிக் நாடுகளில் குறிப்பாக பிசுமத்தைட்டுடன் காணப்பட்டது.[1][2][3]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சில்லெனைட்டு கனிமத்தை Sén[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது
சில்லெனைட்டு கனிமம் என்பது Bi12SiO20 சேர்மம் போன்ற அமைப்பைக் கொண்ட பிசுமத் சேர்மங்களின் ஒரு வகுப்பைக் குறிக்கிறது. இதன் தாய் அமைப்பு γ-Bi2O3 ஆகும். இது பிசுமத் ஆக்சைடின் சிற்றுறுதி நிலையான வடிவமாகும்.[5] சில்லெனைடின் கனசதுர படிக அமைப்பானது பிசுமத் சிலிக்கான் ஆக்சைடு , பிசுமத் தைட்டனேட்டு மற்றும் பிசுமத் செருமனேட்டு போன்ற பலவகையான பொருட்களால் ஆனதாகும்.[6] இந்த சேர்மங்கள் அவற்றின் நேரியல் அல்லாத ஒளியியல் பண்புகளுக்காக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.[7][8][9]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Sillenite. Webmineral
- ↑ 2.0 2.1 Sillenite. Mindat
- ↑ 3.0 3.1 Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W. and Nichols, Monte C., ed. (1995). "Sillenite". Handbook of Mineralogy (PDF). Vol. II (Silica, Silicates). Chantilly, VA, US: Mineralogical Society of America. ISBN 0962209716.
{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Valant, Matjaz, and Danilo Suvorov. "A stoichiometric model for sillenites." Chemistry of materials 14.8 (2002): 3471-3476 | https://pubs.acs.org/doi/abs/10.1021/cm021173l
- ↑ Santos, D. J.; Barbosa, L. B.; Silva, R. S.; MacEdo, Z. S. (2013). "Fabrication and Electrical Characterization of Translucent Bi12TiiO20 Ceramics". Advances in Condensed Matter Physics 2013: 1. doi:10.1155/2013/536754.
- ↑ Marinova, Vera, et al. "Real-time holography in ruthenium-doped bismuth sillenite crystals at 1064 nm." Optics letters 36.11 (2011): 1981-1983. | https://doi.org/10.1364/NP.2010.NTuC12
- ↑ Reyher, H-J., U. Hellwig, and O. Thiemann. "Optically detected magnetic resonance of the bismuth-on-metal-site intrinsic defect in photorefractive sillenite crystals." Physical Review B 47.10 (1993): 5638.
- ↑ Malinovskii, Valerii K., et al. "Photoinduced phenomena in sillenites." Novosibirsk Izdatel Nauka (1990).