சி. வீரமணி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சி. வீரமணி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
திசம்பர் 1967 – 1971
முன்னையவர்ஆர். நல்லமுத்து
பின்னவர்வி. முத்து
தொகுதிசங்ககிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-03-06)6 மார்ச்சு 1939
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்அரசு அலுவலக எழுத்தர்

சி. வீரமணி (C. Veeramani)(6 மார்ச்சு 1939-19 திசம்பர் 2004)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் கருக்கம்பாளையம் கிராமத்தினைச் சேர்ந்தவர். ஆத்தூர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற வீரமணி, சேலம் அரசுக் கல்லூரியில் பல்கலைக்கழக புதுமுகவகுப்புக் கல்வியினைப் பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆன ஆர். நல்லமுத்துவின் மறைவினால் 20 திசம்பர் 1967 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

தேர்தல் செயல்பாடு

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 இடைத்தேர்தல்: சங்ககிரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சி. வீரமணி 34,477 59.05
காங்கிரசு பி. டி. சிரீரங்கன் 22,923 39.26[4]
சுயேச்சை என். ஆறுமுகம் 982 1.68 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,554 19.79
பதிவான வாக்குகள் 58382 61.99
பதிவு செய்த வாக்காளர்கள் 94,177
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 119.79

மேற்கோள்கள்

  1. https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_10.pdf
  2. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 267.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=சி._வீரமணி&oldid=347405" இலிருந்து மீள்விக்கப்பட்டது