சீயுனெரைட்டு
| சீயுனெரைட்டுZeunerite | |
|---|---|
| படிமம்:Zeunerite 2 on quartz Copper urano-arsenate Perry Jones Group Plumas County California 1969.jpg | |
| பொதுவானாவை | |
| வகை | ஆர்சனேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Cu(UO2)2(AsO4)2•(10-16)H2O |
| இனங்காணல் | |
| நிறம் | மஞ்சள் பச்சை, மாணிக்கப் பச்சை |
| படிக இயல்பு | {001} இல் தட்டையான படிகங்கள், |
| படிக அமைப்பு | நாற்கோணகம் |
| பிளப்பு | {001} தெளிவு, {100}, மறைமுகம் |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
| மிளிர்வு | கண்ணாடிப் பளபளப்பு |
| கீற்றுவண்ணம் | வெளிர் பச்சை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், நீர் நீங்கினால் ஒளி கசியும் |
| ஒப்படர்த்தி | 3.2 - 3.4 |
| ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (-) |
| ஒளிவிலகல் எண் | nω = 1.610 - 1.613 nε = 1.582 - 1.585 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.028 |
| பலதிசை வண்ணப்படிகமை | கண்களுக்குத் தெரியும் |
| பிற சிறப்பியல்புகள் | |
| மேற்கோள்கள் | [1][2][3] |
சீயுனெரைட்டு (Zeunerite) என்பது Cu(UO2)2(AsO4)2•(10-16)H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஆட்டுனைட்டு எனப்படும் நீரேறிய கால்சியம் யுரேனைல் பாசுபேட்டு குழு கனிமங்களில் ஓர் உறுப்பினராக சீயுனெரைட்டு கருதப்படுகிறது. நீர் நீக்கப்பட்ட சீயுனெரைட்டான மெட்டாசீயுனெரைட்டு இதனுடன் சேர்ந்து காணப்படுகிறது.
ஆர்சனிக் கலந்துள்ள நீர்வெப்ப யுரேனியத் தாது படிவுகளின் ஆக்சிசனேற்ற காலநிலை மண்டலத்தில் இரண்டாம்நிலை கனிமமாக சீயுனெரைட்டு தோன்றுகிறது. ஒலிவெனைட்டு, மேன்சுபீல்டைட்டு, சிகோரோடைட்டு, அசுரைட்டு, மாலகைட்டு போன்ற கனிமங்கள் சியூரைட்டுடன் கலந்து காணப்படுகின்றன. [1]
செருமனி நாட்டிலுள்ள சாக்சனி மாநிலம் சிக்னீபெர்கு மாவட்டத்தின் கனிம மலைத்தொடரில் 1872 ஆம் ஆண்டு சீயுனெரைட்டு கண்டறியப்பட்டது. 1828-1907 ஆம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்த அறிவியலாளர் குசுதாவ் அண்டன் சீயுனெர் நினைவாக இக்கனிமத்திற்கு சீயுனெரைட்டு எனப்பெயரிடப்பட்டது. [2]