சுபோத் தாசு
சுபோத் தாசு Subodh Das | |
|---|---|
| திரிபுரா அரசாங்கத்தில் பஞ்சாயத்து அமைச்சர் | |
| பதவியில் 1993–2004 | |
| சட்டமன்ற உறுப்பினர் பனிசாகர் | |
| பதவியில் 1977–2018 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 நவம்பர் 1947 [1] |
| இறப்பு | 24 February 2019 (aged 71) |
| அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசுட்டு |
| பெற்றோர் | பிகாரி தாசு (தந்தை) நளினி தாசு (தாய்) |
சுபோத் தாசு (Subodh Das) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1947 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சியம்) உறுப்பினராக திரிபுரா மாநிலத்தின் அரசியலில் இயங்கினார். திரிபுரா சட்டமன்றத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பனிசாகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக எட்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
வாழ்க்கைக்குறிப்பு
சுபோத் தாசு 1947 ஆம் ஆண்டு சில்கெட்டின் அபிகஞ்சில் பிகாரி தாசு மற்றும் நளினி தாசு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பின்னர் இவர்கள் திரிபுராவுக்கு குடிபெயர்ந்தனர்.
சுபோத் தாசு 1965 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியில் (மார்க்சிசுட்டு) உறுப்பினரானார். 1977 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பனிசாகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திரிபுரா சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] 1993 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை திரிபுரா அரசின் பஞ்சாயத்து அமைச்சராகவும் பணியாற்றினார்.[1] 1978 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை திரிபுராவின் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசுட்டு) குழுவின் உறுப்பினராக இருந்தார்.[3]
சுபோத் தாசு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று அகர்தலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்.[1][3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "প্রাক্তনমন্ত্রীসুবোধদাসেরপ্রয়াণেসোমবারবাজেটঅধিবেশনেরদ্বিতীয়দিনেস্মৃতিচারণকরলত্রিপুরাবিধানসভা". Jagaran (in Bengali). 25 February 2019. Retrieved 6 October 2019.
- ↑ 2.0 2.1 "Panisagar Assembly Constituency Election Result". www.resultuniversity.com. Retrieved 6 October 2019.
- ↑ 3.0 3.1 "Comrade Subodh Das Passes Away". Peoples Democracy. 4 March 2019. Retrieved 6 October 2019.