செஞ்சோலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

செஞ்சோலை என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக வேலுப்பிள்ளை பிரபாகரனின் பணிப்புரையின் பேரில் 1991, யூலை, 10 ஆம் நாள் 15 மாணவிகளுடன்[1] தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். இந்த இல்லத்தின் பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அணியைச் சேர்ந்த ஜனனி (லலிதா நடராஜா)[2]

தோற்றம்

1990ஆம் ஆண்டு யூலை, 10 ஆம் நாள் வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் மரணமடைந்த கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், தந்தையரைப் பிரிந்து, இழந்து வாழும் குழந்தைகளுக்கு ஓர் இல்லத்தை அமைத்து அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டுமென்ற தனது ஆசையை தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் தெரிவித்திருந்தார். அதன் காரணமாக 1991ஆம் ஆண்டு யூலை, 10 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நாளில் செஞ்சோலை மகளிர் பாடசாலை யாழ்ப்பாணத்தில் சிறிய இடம் ஒன்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாணவியர் தொகை அதிகரிக்க ஆரம்பித்ததும், யாழ் சண்டிலிப்பாயில் ஒரு இல்லம் நிர்மாணிக்கப்பட்டு ஐப்பசி 22 ஆம் நாள் தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் செஞ்சோலை பெண் குழுந்தைகள் இல்லம் திறந்து வைக்கப்பட்டது. இங்கே கைக்குழந்தைகள் தொடக்கம் 18 வயது வரையான பெண்பிள்ளைகள் முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்பாடசாலை போன்ற கல்வி முறைக்கேற்ப கல்வியறிவு வழங்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள்.[3]

இவ்வில்லத்தில் 2005 வாக்கில் 242 பெண் பிள்ளைகள் பராமரிப்பில் இருந்தனர்[4]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் வரலாறு எரிமலை-August 11, 2023
  2. செஞ்சோலைச் சிறார் இல்லம்
  3. செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் வரலாறு எரிமலை-August 11, 2023
  4. தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .31

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=செஞ்சோலை&oldid=368543" இலிருந்து மீள்விக்கப்பட்டது