செப்டம்பர் 13 (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
செப்டம்பர் 13 September 13 | |
---|---|
இயக்கம் | இராசா பாலகிருட்டிணா |
தயாரிப்பு | இவான் நிக்லி சைலா சிறீ செயச்சந்திரன் |
இசை | சுரேசு பீட்டர்சு இரமேசு கிருட்டிணா |
நடிப்பு | சிரேயா ரிதிபன் வினய் பிரசாத் செய் சகதீசு இவான் நிக்லி |
ஒளிப்பதிவு | இராசா பாலகிருட்டிணா |
படத்தொகுப்பு | இராசா பாலகிருட்டிணா |
வெளியீடு | 1 ஏப்ரல் 2022[1] |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
செப்டம்பர் 13 (September 13 ) என்பது இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஒரு திரைப்படமாகும். திரைப்படத்தை இராசா பால்கிருட்டிணா இயக்கியுள்ளார். சிரேயா ரிதிபன், வினய் பிரசாத், செய் சகதீசு மற்றும் இவான் நிக்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதையை இவான் நிக்லி எழுதியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை இயக்குனரே கையாண்டுள்ளார். கோவிட் தொற்றுநோயின் முதல் ஊரடங்கிற்குப் பிறகு படத் தயாரிப்பு தொடங்கியது.
கதை
நித்யா ஓர் இளம் பெண். தனது கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் மூலம், ஒரு செவிலியராக மாறுகிறார். கோவிட் இந்தியாவைத் தாக்கும் வரை எல்லாம் இயல்பாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் கருவாகும்.
நடிகர்கள்
- சிரேயா ரித்திபென்
- செய் செகதீசு
- வினய் பிரசாத்
- சியார்ச்சு சபதிகம்
- நிக்லி கூட
- யமுனா சிறீநிதி:
- சிந்தன் ராவ்
இசை
திரைப்படத்திற்கு சுரேசு பீட்டர்சு இசையமைத்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "An ode to nurses". New Indian Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-06-11.
- ↑ "Timeless Tunes". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 19 July 2022.