செரியானைட்டு-(Ce)
| செரியானைட்டு-(Ce) Cerianite-(Ce) | |
|---|---|
மிகவும் அரிதான கனிமமான செரியானைட்டு -(Ce) கனிமத்தின் மஞ்சள் நிறத் தூள்-பிரேசில் நாட்டில் கிடைத்த கனிமம். | |
| பொதுவானாவை | |
| வகை | ஆக்சைடு |
| வேதி வாய்பாடு | (Ce,Th)O 2 |
| இனங்காணல் | |
| நிறம் | அடர் பச்சை நிற அம்பர்-மஞ்சள், மஞ்சள் |
| படிக இயல்பு | எண்முகம்; மண், திரட்சி |
| படிக அமைப்பு | கனசதுரம் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் அல்லது ஒளி ஊடுறுவும் |
| அடர்த்தி | 7.20 (செயற்கைப் பொருள், கணக்கிடப்பட்டது.; தோராயமாக) |
| பிற சிறப்பியல்புகள் | |
| மேற்கோள்கள் | [1][2][3] |
செரியானைட்டு-(Ce)- (Monazite-(Ce)) என்பது (Ce,Th)O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒப்பீட்டளவில் இது ஓர் அரிதான ஆக்சைடு கனிமமாகும். யுரேனைட்டு கனிமக் குழுவைச் சேர்ந்தது.[3][4] அத்தியாவசியமான நாண்கிணைதிற சீரியத்தைக் கொண்ட தற்போது அறியப்பட்ட சில கனிமங்களில் இதுவும் ஒன்றாகும். சுடெடிண்டைட்டு மற்றும் டைர்னாசைட்டு-(La) ஆகியவை மற்ற சில எடுத்துக்காட்டுகளாகும்.[5][6]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் செரியானைட்டு-(Ce) கனிமத்தை Cei-Ce[7] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தோற்றம்
செரியானைட்டு-(Ce) காரப் பாறைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. பெரும்பாலும் நெஃபலின் சினைட்டுகள் என்ற காரப் பாறைகளுடன் சேர்ந்து காணப்படுகிறது.[2] It may be found in carbonatites.[3] கார்பனேட்டைட்டுகளிலும் இக்கனிமம் காணப்படலாம். அபடைட்டு குழுவின் கனிமங்கள், பாசுட்னாசைட்டு-குழு கனிமங்கள், கால்சைட்டு, பெல்ட்சுபார் "புளூசெரைட்டு", "ஐதரோமிகா", இல்மனைட்டு, நெஃபலின், மேக்னடைட்டு, டோர்னெபோமைட்டு" மற்றும் திரெமோலைட்டு ஆகியவற்றுடன் செரியானைட்டு-(Ce) தொடர்பு கொண்டுள்ளது. இது அறியப்பட்ட மிகவும் எளிமையான சீரியம் கனிமமாகும். [3]
தோரியம் தவிர செரியனைட்டு-(Ce) சுவடு அளவில் நையோபியம், இட்ரியம், இலந்தனம், இட்டெர்பியம், சிர்க்கோனியம் மற்றும் தாண்டலம் ஆகியவற்றுடனும் சேர்ந்து இருக்கும்.[2]
படிகக் கட்டமைப்பு
படிக அமைப்பு பற்றிய விவரங்களுக்கு சீரியம்(IV) ஆக்சைடை ஒப்பிட்டு பார்க்கலாம். சீரியா மற்றும் தோரியா இரண்டும் புளோரைட்டு அமைப்பைக் கொண்டுள்ளன.
மேற்கோள்கள்
- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 2.2 "Cerianite-(Ce) - Handbook of Mineralogy" (PDF). Handbookofmineralogy.org. Retrieved 2016-03-04.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Cerianite-(Ce): Cerianite-(Ce) mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-04.
- ↑ Graham, A.R., 1955. Cerianite CeO2: a new rare-earth oxide mineral. American Mineralogist 40, 560-564
- ↑ "Stetindite: Stetindite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-04.
- ↑ "Dyrnaesite-(La): Dyrnaesite-(La) mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-04.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.