சேந்தன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

சேந்தன் என்னும் பெயர் கொண்ட பெருமக்கள் பலர் வாழ்ந்துவந்தனர்.
சேந்தன் என்னும் சொல் 'சேயோன்' [1] என்னும் முருகனைக் குறிக்கும்.

அவர்களைப் பற்றிய செய்திகளைத் தரும் நிரலடைவை இங்குக் காணலாம்.

நிரலடைவு

வரிசை எண் பெயர் ஊர் / உறவு குறிப்பு காலம் / நூற்றாண்டு
1 சேந்தன் (மண்டைத்தீவு) ஈழத்தின் மண்டைதீவு இவன் கால தலைநகர். சேந்தன் மாறன் காசு வெளியிட்ட அரசன். இவன் வெளியிட்ட காசில் மாறன் என்ற பாண்டியர் குடிப்பெயரும் கெண்டை மீனும் காணப்படுவதால் பாண்டியன் என கருதப்படுகிறான். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்
2 சேந்தன் சோழநாட்டிலுள்ள ஆர்க்காடு என்னும் ஊரிலிருந்து ஆண்ட சங்ககால அரசன் அழிசி என்பவனின் மகன் [2] சங்ககாலம்
3 பூதஞ்சேந்தனார் புலவர் இனியவை நாற்பது பாடியவர் 7
4 செழியன் சேந்தன் பாண்டிய மன்னன் நெடுமாறனின் தந்தை மண்மகளை மறுக்கடிந்த சேந்தன் [3] 625-640
5 அம்பர் சேந்தன் அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல் [4] திவாகர நிகண்டு பாடிய திவாகர முனிவருக்கு இன்னமுது ஊட்டியவன் [5] 850-880
6 செப்புறை சேந்தன் செப்புறை என்னும் ஊரிலிருந்த வள்ளல் நம்பியாண்டார் நம்பி திருப்பல்லாண்டு நூலில் குறிப்பிடப்படுபவன் 950
7 சேந்தன் 'பொன்பற்றி' எனப்பட்ட பொன்பரப்பி காவலன் வீரசோழியம் உரையாசிரியர்களைப் போற்றியவன் 11
8 சேந்தன் தூமான் 'தமிழின் கிழவன்' எனப் போற்றப்படும் வள்ளல் சூளாமணி பாடிய தோலாமொழித் தேவரைப் பேணியவன் 11
9 கூத்தப் பெருஞ்சேந்தன் - சேனாவரையர் தொல்காப்பிய எச்சவியல் உரையில் வரும் மேற்கோள் பாடலில் குறிப்பிடப்படுபவன் 13
10 சேந்தனார் நாங்கூர் சேந்தன் வள்ளல் பட்டினத்தாரால் சிறையில் இருந்து மீட்கப்பட்டவன். [6] 14

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

__DISAMBIG__

__DISAMBIG__

அடிக்குறிப்பு

  1. சேயோன் மேய மைவரை உலகம் (தொல்காப்பியம் பொருளதிகாரம் 5)
  2. திதலை எஃகின் சேந்தன் தந்தை,
    தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,
    வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
    அரியல் அம் கழனி ஆர்க்காடு (நற்றிணை 190)

  3. வேள்விக்குடிச் செப்பேடு
  4. அம்பர் என்னும் ஊர் நன்னிலம் வட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அண்மையில் உள்ளதோர் ஊர்
  5. சேந்தன் திவாகரம் நூலில் 19 இடங்களில் இந்தக் குறிப்பு வருகிறது
  6. 'மத்தளை தயிர்' எனத்தொடங்கும் பட்டினத்தார் பாடல்
"https://tamilar.wiki/w/index.php?title=சேந்தன்&oldid=372234" இலிருந்து மீள்விக்கப்பட்டது