சேரமான் எந்தை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

சேரமான் எந்தை சங்ககாலப் புலவர். குறுந்தொகை 22 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது.

பாடல் சொல்லும் செய்தி

அவன் தன்னை விட்டுவிட்டுச் செல்லப்போவதை அறிந்து தாங்கமாட்டாத துயரில் மூழ்கியிருக்கிறாள். அவளைத் தேற்றுவதற்காகத் தோழி இதனைச் சொல்கிறாள்.

நீர் வார் கண்ணோடு உன்னை இங்கேயே விட்டுவிட்டு யார் பிரிவார்? மரா மரம் போல் மணக்கும் நுதலை உடைய உன்னையும் உடன் கொண்டுசெல்வார். (கவலைப்படாதே)

"https://tamilar.wiki/index.php?title=சேரமான்_எந்தை&oldid=12485" இருந்து மீள்விக்கப்பட்டது