சேர்வை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

சேர்வை என்பது தமிழகத்தில் பல்வேறு சாதிகளால் பயன்படுத்தப்படும் ஒரு பட்டப் பெயராகும். தமிழ்நாட்டில் முத்தரையர், கோனார், முக்குலத்தோர் மற்றும் வெள்ளாளர் ஆகிய சாதியினருக்கு சேர்வை பட்டம் உள்ளது. தெலுங்கு மொழி பேசும் கொல்லா, கன்னட மொழி பேசும் வொக்கலிகர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது.[1][2][3][4] சேர்வை என்றால் அரசு சார்ந்த சேவையில் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பணிக்குழுவினர் எனப்படும். அரசு சேவகம் (சேவை) என்பதே சேர்வையாக மருவியது. பொதுவாக மன்னராட்சிக் காலங்களில் கோயில் மற்றும் அரண்மனையில் கோசாலைக்காவல், கணக்காயர், பண்டாரக்காவல், படிக்காவல், மேல்காவல், பல்லக்கு தூக்குதல், பராமரித்தல் மற்றும் பராமரிப்புப்பணி, அக்கசாலைக்காவல் ஆகிய வேலைகளை செய்த மக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பார்கள். ஒவ்வொரு துறை சார்ந்த சேவை செய்வோரும் ஒரே குழுவாக, அதாவது கோசாலைக்காவல் சேர்வை, பண்டாரக்காவல் சேர்வை என்பது போல தனித்தனியே வழங்கப்பட்டுள்ளனர். மேலும், சேர்வைக்காரர்கள் என்பவர்கள் அந்தந்த சேவைக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். மன்னராட்சியில் கோவில், அரண்மனை இவற்றில் சேவை செய்தவர்களை அரசாங்கப்பணியாளர், அரச ஊழியம் செய்வோர் என்ற பொருளில் சேர்வை என்று அழைத்தனர். அதே வேளையில், சேர்வை என்ற பட்டம் தளபதிகளுக்கும், சில குறுநில மன்னர்களுக்கும் உண்டு. சேர்வைக்காரர் பட்டம் உள்ளவர்களின் சமுதாயத்தை பொருத்து அவர்களின் பதவியும், பதவியை பொருத்து அவர்களின் அதிகாரமும் மாறுபடும். கி, பி, 1746-62 வரை சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரது பிரதானியாக இருந்த வெள்ளையன்‌ சேர்வைக்காரர்‌ [5], கி.பி.1795 இல் முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னரது பிரதானியாக இருந்த மயிலப்பன் சேர்வைகாரர்[6], விஜயரகுநாதராய தொண்டைமான் மன்னரின் படை தளபதி ஆவுடையப்ப சேர்வைக்காரர்‌[7], மல்லாக்கோட்டை நாடு வடக்கு வட்டத்தில் உள்ள திருமலை பகுதிக்கு மருதுபாண்டியர்களால் திசைக்காவலராக நியமிக்கப்பட்டிருந்த கருவாப்பாண்டியன் சேர்வை[8] போன்றவர்கள் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேற்கோள்கள்

  1. கால்டுவெல் திருநெல்வேலி சரித்திரம். p. 343.
  2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. p. 148.
  3. Sanga Ilakkiyam Drivida Iyakka Vasippu. p. 67.
  4. ஆவணம் 1996. p. 125.
  5. மாவீரர் மருதுபாண்டியர் 1996. p. 16.
  6. மறவர் சீமை மாவீரன் மயிலப்பன். p. 3.
  7. புதுக்கோட்டை வரலாறு. p. 51.
  8. மருதுபாண்டிய மன்னர்கள். p. 244.
"https://tamilar.wiki/w/index.php?title=சேர்வை&oldid=372575" இலிருந்து மீள்விக்கப்பட்டது