சோமங்கலம்
சோமங்கலம் | |
|---|---|
சோமங்கலம், காஞ்சிபுரம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 12°57′09″N 80°02′27″E / 12.9524°N 80.0409°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| ஏற்றம் | 42.95 m (140.91 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 4,376 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 602109 |
| புறநகர்ப் பகுதிகள் | தண்டலம், குன்றத்தூர், நடுவீரப்பட்டு, பூந்தண்டலம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் |
| மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
| சட்டமன்றத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சோமங்கலம் (Somangalam) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 42.95 மீட்டர்கள் (140.9 அடி) உயரத்தில், (12°57′09″N 80°02′27″E / 12.9524°N 80.0409°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சோமங்கலம் புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது.
மக்கள்தொகை
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், சோமங்கலம் புறநகர்ப் பகுதியின் மொத்த மக்கள்தொகை 4,376. இதில் ஆண்கள் எண்ணிக்கை 2,199 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 2,177 ஆகும்.[1]
சமயம்
சோமங்கலம் பகுதியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்றும்,[2] சோமநாதீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்றும் உள்ளன.[3]
அரசியல்
சோமங்கலம் பகுதியானது, திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.
மேற்கோள்கள்
- ↑ "Somangalam Village Population - Sriperumbudur - Kancheepuram, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-09-22.
- ↑ முன்னூர் ரமேஷ், சொ.பாலசுப்ரமணியன் (2021-04-20). "சுகமான வாழ்வு தரும் சோமங்கலம் சுந்தரராஜர்!". Vikatan. Retrieved 2024-09-22.
- ↑ Ganesh (2021-11-18). "Somanaadheeswarar Temple - Somangalam I சோமநாதீஸ்வரர் கோயில் - சோமங்கலம் I India temple tour" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-09-22.