ஜான் ரத்தினம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஜான் ரத்தினம் (John Rathinam) என்பவர் 1885-ஆம் ஆண்டு அயோத்தி தாசருடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழை நிறுவியவர் ஆவார். இவ்விதழானது சென்னையில் இருந்த தீண்டத்தகாதவர்களின் துன்பங்களில் கவனம் செலுத்துகிற வகையில் நிறுவப்பட்டது. [1] [2] 1885-ஆம் ஆண்டு பேராயர் ஜான் ரத்தினம், பண்டிதர் அயோத்தி தாசருடன் இணைந்து திராவிடர் கழகம் என்ற ஆதி திராவிடர்களுக்கான அமைப்பையும், அதற்கென திராவிட பாண்டியன் என்ற ஏட்டையும் உருவாக்கினார்.[3]

ஜான் ரத்தினம்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுதிராவிடர் கழகத்தை நிறுவியவர்.[4] தீண்டாமை ஒழிப்பு
குறிப்பிடத்தக்க படைப்புகள்திராவிட பாண்டியன் என்ற இதழை நிறுவியர்.[5]

மாலை நேரப் பள்ளிகள்

ஜான் ரத்தினம் உருவாக்கிய திராவிட கழகம் சென்னையில் சிறிய அளவில் மாலை நேரப் பள்ளிகளை நடத்தி வந்தது. பிறகு இவர் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த அமைப்பின் பணிகள் படிப்படியாக நின்று போனது.[6]

மேற்கோள்கள்

  1. Raj Sekhar Basu (14 February 2011). Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850 - 1956. SAGE Publications. p. 174. ISBN 9788132105145.
  2. Anand Teltumbde (19 August 2016). Dalits: Past, present and future. Taylor & Francis. p. 57. ISBN 9781315526447.
  3. வினோத், இரா (2019-03-29). "திராவிட நாட்டைக் கட்டமைக்க தமிழ்நாட்டுக்கு வெளியே அண்ணா மேற்கொண்ட பயணம்". hindutamil. Retrieved 2024-11-17.
  4. வினோத், இரா (2019-03-29). "திராவிட நாட்டைக் கட்டமைக்க தமிழ்நாட்டுக்கு வெளியே அண்ணா மேற்கொண்ட பயணம்". hindutamil. Retrieved 2024-11-17.
  5. வினோத், இரா (2019-03-29). "திராவிட நாட்டைக் கட்டமைக்க தமிழ்நாட்டுக்கு வெளியே அண்ணா மேற்கொண்ட பயணம்". hindutamil. Retrieved 2024-11-17.
  6. கௌதம, சன்னா. "அயோத்திதாசப் பண்டிதர் யார், அவர் ஏன் திராவிடன் - தமிழன் என்ற அடையாளத்தை முன்னெடுத்தார்?". Vikatan.com. Retrieved 2024-11-17.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜான்_ரத்தினம்&oldid=377628" இலிருந்து மீள்விக்கப்பட்டது