ஜி. கே. மூப்பனார்
Jump to navigation
Jump to search
கோ. கருப்பையா மூப்பனார் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | சோ. இராசாராமன் |
| பின்னவர் | சோ. இராசாராமன் |
| தொகுதி | பாபநாசம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | கோவிந்தசாமி. கருப்பையா மூப்பனார் 19 ஆகத்து 1931 கபிஸ்தலம், தமிழ்நாடு |
| இறப்பு | 30 ஆகத்து 2001 சென்னை |
| அரசியல் கட்சி | தமிழ் மாநில காங்கிரஸ் |
| துணைவர் | கஸ்தூரி |
| பிள்ளைகள் |
|
| பெற்றோர்(s) | தந்தை : கோவிந்தசாமி மூப்பனார் தாயார் : செல்லத்தம்மாள் |
| வாழிடம் | சென்னை |
As of ஆகத்து 30, 2001 மூலம்: [1] | |
ஜி. கே. மூப்பனார் (G. K. Moopanar) முழுப்பெயராக கோவிந்தசாமி கருப்பையா மூப்பனார் ஆகஸ்ட் 19, 1931 - ஆகஸ்ட் 30, 2001) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.

வாழ்க்கை குறிப்பு
- இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் உடையார் சமுதாயத்தின் பிரிவுகளில் ஒன்றான மூப்பனார் சமூகத்தில் கோவிந்தசாமி மூப்பனார்–செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
- இவரது இயற்பெயர் கருப்பையா மூப்பனார் என்பதே ஆகும் இவருடன் பிறந்தோர் அறுவர் - சகோதரர்கள்: ஜி. ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமானுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள்.
- இவர் மனைவி பெயர் கஸ்தூரி இவருக்கு அக்காலகட்டத்திலே சுந்தரபெருமாள் கோவில், பாபநாசம், கபிஸ்தலம் பகுதியில் 6000 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது.
அரசியல் பொது வாழ்க்கை
- இவர் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் அதே காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக இருமுறையும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்ய சபா) நான்கு முறையும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றினார்.
- இவர் 1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்கவிருந்த நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கருத்து வேறுபாடால் காங்கிரஸ் கட்சி தலைமையை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தனது தலைமையில் நிறுவி அதன் தலைவராக 30-8-2001 காலமாகும் வரை செயல்பட்டார்.
- அதன் பிறகு இவரது மகன் ஜி.கே.வாசன் தனது தந்தை உருவாக்கிய தமாகாவை காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி வேண்டுகோளை ஏற்று மீண்டும் அவரது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைத்துவிட்டு பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசில் கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
வகித்த பதவிகள்
- புரவலர்-தலைவர் கும்பகோணம் சாரணர் சங்கம்
- தலைவர் சந்திரசேகராபுரம் கூட்டுறவு பண்டகசாலை 1956-1972
- ,, திருவையாறு ஸ்ரீ தியாகப் பிரம்ம மகோத்சவ சபை 1980-2001
- ,, தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி 1965-1975
- ,, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1976-1980
- பொதுச் செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 1980-1988
- தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1988-1989
- தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் 1989-1990[1]
- ராஜ்யசபா உறுப்பினர் 1977-1989
- தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத்தலைவர் 1996-2001
- ஆயுள் உறுப்பினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
ஈடுபாடு
- இசை
- அரசியல்
- பொதுத் தொண்டு